

பேபி கார்ன் பஜ்ஜி
தேவை:
பேபி கார்ன் - 6,
கடலை மாவு,
அரிசி மாவு - தலா அரை கப்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி தனியே வைக்கவும். எண்ணெய் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், நறுக்கிய பேபி கார்னை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வித்தியாசமான பேபி கார்ன் பஜ்ஜி ரெடி.
பேபி கார்ன் 65
தேவை:
பேபி கார்ன் - 8
சாட் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மாவிற்கு...
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து மேலே சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் 65 ரெடி.
பேபி கார்ன் கிரேவி
தேவை:
பேபி கார்ன் - 10, வெந்தயக்கீரை - கால் கப், முந்திரிப் பருப்பு - 5, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
ஏலக்காய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, ஆறியவுடன் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதில் வெந்த பேபி கார்ன், சர்க்கரை சேர்க்கவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும். சூப்பர் சுவையில் பேபி கார்ன் கிரேவி ரெடி.
பேபி கார்ன் பொரியல்
தேவை:
பேபி கார்ன் - 4,
பெரிய வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய்
செய்முறை:
பேபிகார்னையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை சேர்க்கவும். பின் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பின் நறுக்கிய பேபிகார்ன், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் கலவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். கார்ன் நன்றாக வெந்ததும் இறக்கிவிடவும்.சுவையான பேபி கார்ன் பொரியல் ரெடி. சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இது வெகு பொருத்தம்.