சின்ன வெங்காயம் முருங்கை தீயல்!

முருங்கை தீயல்
முருங்கை தீயல்

தேவையான பொருட்கள் :

வறுத்து அரைக்க:

  • கொத்தமல்லி விதை :2ஸ்பூன்

  • நீட்டுமிளகாய் வற்றல் : 8

  • கருவேப்பிலை : ஒரு கொத்து

  • துருவிய தேங்காய் : அரை மூடி

  • தாளித்து வறுக்க : தேங்காய் எண்ணெய்!

  • எலுமிச்சை அளவு புளி

  • ஒரு முருங்கைக்காய்

  • பத்து (அ) பனிரெண்டு சின்ன வெங்காயம்

செய்முறை :

சின்ன வெங்காயத்தை உறித்து இரண்டிரண்டாகவோ தனியாக வோ சைஸுக்கு ஏற்றவாறு நறுக்கிக் கொள்ளவும் !

முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் !

புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்!

வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி 2 ஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு வறுத்து சிவந்ததும்

பின்னர் அதில் 7 அ 8 மிளகாய்வற்றலைப் போட்டு வறுக்கவும் !

முருங்கை தீயல்
முருங்கை தீயல்

ஒரு கொத்து கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி இறக்கி ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும் !

அதே வாணலியில் இன்னொரு ஸ்பூன் தே.எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காயைப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும் !

வறுக்க வறுக்க மெல்ல கலர் மாறி ப்ரவுன் நிறம் வரும் போது இறக்கவும் ! இதுதான் தீயலோட பேஸ் !

தேங்காய் துருவலை அரைக்க வைத்திருந்த கலவையில் கொட்டி நன்கு கலக்கவும் ! அதில் நீர் கலந்து நல்ல மையான நீர்த்த பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் !

வாணலியில் மறுபடி 2 ஸ்பூன் தே.எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கடுகு போட்டு பொறிந்ததும் கொஞ்சம் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் ,முருங்கைக்காய் போடவும் ! நன்கு புரட்டி , ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்! ஊறவைத்திருந்த புளியை கெட்டியாகக் கரைத்துக் கலக்கவும் ! இப்பொழுது புளித்தண்ணீர், மஞ்சள், உப்பு எல்லாம் சேர்த்து முருங்கை, சி.வெ வோடு சேர்ந்து நன்கு வேகும் வரை ஒரு 5-7 நிமிடம் மூடி வைக்கவும் !

பின்னர் திறந்து அரைத்து வைத்து இருந்த கலவையைக் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கொத்துமல்லி தூவி இறக்கிவிடலாம் !

தீயல் ரெடி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com