பனானா பிரெஞ்சு டோஸ்ட்
தேவையானவை:
பழுத்த வாழைப்பழம் - 2
கெட்டிப்பால் - 2 கப்
கோதுமை பிரட் - 6
வெண்ணிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன் வால்நட் அல்லது அக்ரோ அல்லது பாதாம்- துருவியது தேவைக்கு
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
செய்முறை:
வாழைப்பழத்தை நன்கு மசித்து காய்ச்சிய கெட்டிப்பால் , வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி ஐந்து நிமிடம் ஊறவிடவும். இந்த கலவையில் பிரட்டை இருபுறமும் நனைத்து தவாவில் டோஸ்ட் செய்யவும். தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்து டோஸ்ட் செய்யலாம். பரிமாறமும் பொடித்த வால்நட் அல்லது பாதாம் மற்றும் தேங்காய் துருவலைத் தூவித் தரலாம்.உடன் ஜாம் வைத்துத் தந்தால் குழந்தைகள் குதூகலமாக சாப்பிடுவார்கள்.
ஸ்பைசி பாஸ்தா
தேவையானவை:
பாஸ்தா-; 250 கிராம்
வெங்காயம் - 2
பூண்டு -: 5 பல்
குடைமிளகாய் - 1பாதி அளவு
வெங்காயத்தாள் - 1கட்டு
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு
அரைக்க
நாட்டு தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி தனியா -1 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், குடைமிளகாய், பூண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது நீர் ஊற்றி மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கொதிக்கும் நீரில் சிறிதளவு எண்ணெய்விட்டு பாஸ்தாவை சேர்த்து வேகவைத்து நீரை வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், நறுக்கிய வெங்காயத்தாளின் வெங்காய பகுதியை சேர்த்து வதக்கி அரைத்த விழுதை சேர்க்கவும். எல்லாம் கலந்து வாசமாக ஒரு கொதி வந்தவுடன் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறி அதனுடன் எலுமிச்சைசாறு தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். நன்கு கலந்து இறக்கும்போது மேலே மீதியுள்ள நறுக்கிய வெங்காயத்தாளில் மேல் பகுதியை தூவி சூடாக பரிமாறவும். தேவைப்பட்டால் கொத்தமல்லித்தழையும் தூவலாம்.
கோதுமை ரவை பழக்கேசரி
தேவையானவை:
கோதுமை ரவை- 1 கப்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை- 11/2 கப்
தண்ணீர் -3 கப்
முந்திரி திராட்சை தலா - 10
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
பைனாப்பிள் சிறிய துண்டுகளாக நறுக்கியது - 1 சிறிய கப்
செய்முறை:
ஒரு சிறிய வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு ரவையை நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதிலேயே மேலும் சிறிது நெய்யில் பொடித்த முந்திரி திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். அடுத்து அடிகனமான வாணலியில் தேவையான தண்ணீர் விட்டு கொதி வந்ததும் வறுத்த ரவையை சேர்த்துக் கட்டியின்றி கிளறவும். இதில் சிறிது நீரில் கலக்கிய கேசரி பவுடரை சேர்க்கவும். ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை சேர்ந்து கெட்டிப் பதம் வந்ததும் தேவையான நெய்யை கலந்து முந்திரி திராட்சை ஏலக்காய்தூள் பழத்துண்டுகளை சேர்த்து கிளறி மூடி 2 நிமிடம் அடுப்பிலேயே மிதமான தீயில் வைத்து இறக்கவும். இது பழங்களின் மணத்துடன் அருமையான இனிப்பு கேசரியாக குழந்தைகளை கவரும்.