பால் பொருட்களை பக்குவமாக பயன்படுத்த சில ஆலோசனைகள்!

milk products
milk productsImage credit - pixabay
Published on

பால், தயிர் வெண்ணெய், நெய் பன்னீர் என்று பால் பொருட்களை வாங்கும்பொழுது அதன் எக்ஸ்பயரி தேதியைப் பார்த்து கவனித்து வாங்க வேண்டும். 

பாலில் எலுமிச்சம் பழம் பிழிந்து கொதிக்க வைத்து வடிகட்டி பன்னீர் தயாரிக்கலாம். இதை தயாரித்தவுடன் மீந்துள்ள திரவம் சத்து நிறைந்தது. இதை சூப், குருமா போன்றவற்றிற்கு சேர்க்கலாம். சப்பாத்தி பிசையவும் உபயோகிக்கலாம். 

பன்னீரை பொரித்தும் பொரிக்காமலும் விருப்பப்படி உபயோகப் படுத்தலாம்.  கொழுப்புச்சத்தை குறைக்க விரும்புபவர்கள் பன்னீரை பொரிக்காமல் உபயோகிக்கலாம். பொரிக்காமல்  மசாலாக்களுடன் சேர்த்து சாப்பிடும்போதும் ருசியாகவே இருக்கும். 

பொரிக்க விரும்புபவர்கள் பன்னீரை லேசாக பொரித்து தண்ணீர் அல்லது தயிரில் ஊற விட்டு மசாலா கொதித்த உடன் சேர்க்கவும். அதிகம் கொதிக்க வைத்தால் பன்னீர் தோல் போல் கெட்டியாகி விடும். 

பால் திரிந்துவிட்டால் வடிகட்டி சர்க்கரை சேர்த்து சில நிமிடங்கள் கிளறி மிக்சியில் போட்டு அரைத்தால் உதிர் உதிராக ஆகிவிடும் எளிதில் பால்கோவா தயார்.  

திரிந்து கெட்டியான பால் பொருட்களை எடுத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி கடும்பு பாலாக சாப்பிடலாம்.

மசாலா மற்றும் குருமாக்களில் காரம் கூடுதலாகி விட்டால் சிறிது தயிரை கடைந்து சேர்க்கலாம். அல்லது தேங்காய் பால் விடலாம். தேங்காய் பாலை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக பசும்பாலை சேர்த்துக் கொள்ளலாம். 

குளிர்காலத்தில் உரை மோர் விடும்போது அதனுடன் சிறிது புளி உருண்டையை போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும். 

புளித்த தயிரை வீணாக்காமல் ஒரு கப் தயிருக்கு ஒரு கப் ரவை, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைத்து வடை போல் தட்டிப் போட்டு சூடாக சாப்பிடலாம். 

தயிர் பச்சடி, ரைத்தா என்று எதை செய்தாலும் கடைசியாக சிறிதளவு தேங்காய் எண்ணெயில் கடுகு தறிவேப்பிலை தாளித்து அதில் சேர்த்தால் வாசனை பிரமாதமாக இருக்கும். 

மோர், தயிர் போன்றவை அதிகமாக புளித்துவிட்டால் செடிகளுக்கு ஊற்றலாம். தலைக்கு தேய்த்து குளிக்கலாம். முடி பட்டு போல் மின்னும். 

மிகவும் சிறிதளவே இருக்கும் பாலேடுகளை எடுத்து முகத்தில் தேய்த்து கழுவலாம். முகம் பளபளப்பாக ஜொலிக்கும். முக வறட்சி நீங்கும். 

இதையும் படியுங்கள்:
சுவையான தேங்காய்ப் பால் குஸ்கா-இளநீர் இட்லி செய்யலாம் வாங்க!
milk products

வெண்ணெய் எடுக்கும்போது சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்தால் ஏடு கெட்டியாக எளிதில் திரண்டு வந்துவிடும். 

வெண்ணையை உருக்கும்போது இறக்குவதற்கு முன் சிறிது மோர் சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும். 

வெண்ணெய் காய்ச்சும்போது அதை முறிப்பதற்கு முற்றிய முருங்கைக்கீரை, கருவேப்பிலை, வெந்தயம் இதில் ஏதையாவது ஒன்றைப் போட்டு முறிக்கலாம் நல்ல மணமாக இருக்கும். 

வெண்ணையை உருக்கி நெய்யானதும் அதை சூட்டுடன் எடுத்து வைத்து விட்டால் குருணை குருணையாக அழகாக மற்றும் சுவையாக இருக்கும்.

நெய் எவ்வளவு நாள் ஆனாலும் ஃப்ரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத்தைப் போட்டு வைத்தால் போதும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com