
எவர்சில்வர் பாத்திரங்களை கழுவும்போது வெங்காயத்தை துண்டுகளாகி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை பயன்படுத்தினால் எவர்சில்வர் பாத்திரங்கள் பளபளப்பாகிவிடும்.
எவர்சில்வர் பாத்திரங்களை பளபளப்பாக இருக்க கேழ்வரகு மாவை போட்டு தேய்க்கலாம்.
எவர்சில்வர் பாத்திரங்களில் கறை படிந்திருந்தால் பாத்திரத்தை அனலில் காட்ட வேண்டும் கறையில்லாமல் போய்விடும் .
அலுமினிய பாத்திரங்களின் அடியில் நிறம் மாறி தோன்றினால் கீரை வகைகளை வேகவைக்கலாம் உடனே பளிச்சென தெரியும்.
அலுமினிய பாத்திரங்களில் உபயோகித்த உடனே நன்கு கழுவி துடைத்து வைக்காவிட்டால் கறை படிந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும்.
அலுமினிய பாத்திரத்தின் உட்பகுதியில் கறுப்பு நிறமாக இருந்தால் ஒரு தக்காளியை வெட்டி போட்டு வேகவையுங்கள் கறுப்பு நிறம் மாறிவிடும்.
பித்தளை பாத்திரங்களில் கறைபடிந்து காணப்பட்டால் எலுமிச்சம் பழ தோல்களை கொண்டு பாத்திரத்தை தேய்த்தால் கறையும் மறையும் பாத்திரங்களும் புதுசுபோல் தெரியும்.
வாணலி கறையாக இருக்கிறதா சிறிது சமையல் உப்பை போட்டு சூடுபடுத்தி அதை பேப்பரால் துடைத்தால் வாணலி புத்தம் புதுசாக தெரியும்.
புதிய பிளாஸ்டிக் பாத்திரங்களை கழுவும்போது சிறிது உப்பு சேர்த்து உப்பு நீர் சேர்த்து கழுவுங்கள் பிளாஸ்டிக் வாடை போய்விடும்.
சாம்பார் போன்றவற்றை செய்வதற்கு கல் சட்டிகளை உபயோகிக்கலாம். சூடான சோப்பு நீரால் இவற்றை நன்கு கழுவி விடலாம்.சட்டிகளின் அடியில் உணவுத்துகள்கள் ஒட்டிக்கொண்டால் ஓர் ஈரத் துணியில் இருந்து உப்பை தூவி நன்கு துடைத்துவிட்டால் எளிதில் வந்துவிடும்.
மிகவும் எண்ணெய் பிசுக்கான இரும்பு பாத்திரங்களில் சோடா மற்றும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பின்னர் தேங்காய் நாரால் நன்கு தேய்த்துவிட்டால் பிசுக்கு போய்விடும்.
எலுமிச்சம்பழம் பழத்தை பிழிந்து விட்டு தோலை வெளியே எறியாமல் எண்ணெய் பிசுக்கு பாத்திரங்களை கழுவினால் சுத்தமாக இருக்கும்.
கோதுமையை சலித்த பின் வரும் தவிட்டை பாத்திரங்கள் தேய்க்க உபயோகப்படுத்தினால் பாத்திரங்கள் பளிச்சென இருக்கும் கை கால்களில் புண்களும் ஏற்படாது.
பித்தளை பாத்திரங்களை நீண்ட நாட்கள் உபயோகிக்காமல் வைத்திருந்தால் பச்சை நிறத்தில் கறை படிந்து விடும் இந்த பாத்திரங்களின் மீது கோலமாவு தண்ணீர் கலந்து பசை போல செய்து பாத்திரத்தின் மீது தடவி உலர்ந்த பின் ஒரு மெல்லிய துணியால் நன்கு துடைத்து பின்னர் தண்ணீரில் அலம்பிவிட்டால் பளபளவென்று ஆகிவிடும்.
வினிகர் மற்றும் உப்பை கலந்து தேய்த்தால் பித்தளை பாத்திரங்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
பித்தளை செம்பு பாத்திரங்களை வெந்நீரில் சோப்பு போட்டு கரைத்த கரைசலில் கழுவி பின்பு வினிகரில் உப்பை கலந்து நன்றாக தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.
தீய்ந்து அடிப்பகுதியில் கரி படிந்த வாணலியை சுத்தம் செய்ய வேண்டுமா ஒரு வெங்காயத்தை நறுக்கி வாணலியில் போட்டு உப்பையும் தண்ணீரையும் அதனோடு சேர்த்து கொதிக்கவையுங்கள் இறக்கி ஆறிய பிறகு கழுவினால் பாத்திரம் பளபளக்கும்.
சமையலுக்கு உபயோகிக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள் துருப்பிடிக்காமல் இருக்க கழுவி ஒரு துணியால் துடைத்து வைக்க வேண்டும் அதனால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும் வாடையும் வராது.
அலுமினிய பாத்திரங்கள் வாங்கும்போது நல்ல திக்கான பாத்திரம் ஆக பார்த்து வாங்க வேண்டும்.
எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்கும்போது அதில் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பார்கள் அந்த ஸ்டிக்கரை எடுக்கச் சிறிது நெயில் பாலிஷை தடவினால் போதும்.