குளிர் காலத்திற்கு ஏற்ற சூப் வகைகள்!
தற்போது குளிர்காலம் நிலவுகிறது இந்த காலநிலைக்கு ஏற்ப செய்து உண்ணக்கூடிய சூப் வகைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறோம். குளிர் காலத்தில் தொண்டைக்கு இதமாகவும் உடலுக்கு கதகதகப்பாகவும் இருக்க கூடியது சூடான சூப்களே. பொதுவாக சூப் வகைகள் எளிதில் ஜீரணமாக கூடியது ஜலதோஷம் சளி போன்றவற்றுக்கு மிக சிறந்த உணவு நிவாரணி. சில சூப் வகைகளின் செய்முறைகளை அளித்துள்ளோம்.
மாதுளை ஸ்வீட்கார்ன் சூப்
தேவையானபொருட்கள் :
2 கப் - மாதுளை
1/2 கப் - ஸ்வீட் கார்ன்
1/2 டீஸ்பூன் - மிளகுத்தூள்
1 டீஸ்பூன் - இஞ்சிச்சாறு
தேவையான அளவு- வெண்ணெய்
தேவையான அளவு - உப்பு
1 டீஸ்பூன் - சோள மாவு
சிறிதளவு மல்லி தழை
செய்முறை :
ஸ்வீட் கார்னை வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.
மாதுளை முத்துகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் , இஞ்சிச்சாறு, மாதுளைச் சாறு சேர்த்துக் 5 மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பின்னர் அதனுடன் ஸ்வீட்கார்ன் கரைசல் சேர்த்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி வெண்ணெய், மிளகு தூள் மல்லிதழை தூவி பரிமாறவும்.
நூடுல்ஸ் வெஜ் சூப்
தேவையான பொருட்கள்:
1 கப் - நறுக்கிய காய்கறிகள் (வேக வைத்தது)
1/2 கப் - நூடுல்ஸ் ( வேக வைத்தது)
4 கப் - காய்கறி வேக வைத்த தண்ணீர் -
1 - வெங்காயம்
தேவையான அளவு-மிளகுத்தூள்
சிறிதளவு - வெங்காயத்தாள்
சிறிதளவு -மல்லி தழை
2 டீஸ்பூன் - வெண்ணெய்
1 டேபிள்ஸ்பூன் - கார்ன் மாவு
தேவையான அளவு - உப்பு
செய்முறை:
வாணலியில் வெண்ணெயை சேர்த்து உருகியதும் நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர் அதில் வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும்.
இதில் சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சேர்க்கவும்.
நன்கு கொதித்த பின்னர் இறக்கி, பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி... மல்லி தழை,வெங்காயத்தாள், மிளகு தூள் சேர்த்துப் பரிமாறவும்.
பாலக் சூப்
தேவையான பொருட்கள்
1 கப் - பாலக் கீரை
1 - வெங்காயம் ,
1/2 கப் - காரட் ( துருவியது)
1/2 டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது
1 டீஸ்பூன் - சோயா சாஸ் , சிறிதளவு - மல்லி தழை-
2 டீஸ்பூன் - வெண்ணெய் தேவையான அளவ-மிளகுதூள்
காய்கறி வேகவைத்த தண்ணீர், தேவையான அளவு - உப்பு
செய்முறை:
வாணலியில் வெண்ணெயை சேர்த்து சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் துருவிய காரட் , இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பாலக் சேர்த்து வேக வைக்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.