நாவில் சுவையூர வைக்கும் ‘உக்களி’ செய்யலாம் வாங்க!

உக்களி
உக்களிimage credit - youtube.com
Published on

தென்இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்புவகை தான் இந்த உக்களி. இது சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரபலமாகும். உக்களியை திருமண விழாக்களில் பாரம்பரியமாக செய்து பரிமாறுவது அங்கே வழக்கமாகும். அத்தகைய உக்களியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு-1 கப்.

தண்ணீர்- 1 ¼ கப்.

உப்பு- 1 சிட்டிகை.

நல்லெண்ணெய்-1 குழிக்கரண்டி.

நெய்-2 தேக்கரண்டி.

முந்திரி-10.

வெல்லம்-3/4 கப்.

ஏலக்காய்-1 தேக்கரண்டி.

பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.

செய்முறை விளக்கம்:

முதலில் பவுலில் 1 கப் அரிசி மாவு, 1 சிட்டிகை உப்பு, 1 ¼ கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஃபேனில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் செய்து  வைத்திருக்கும் மாவு ஊற்றி ஒரு 10 நிமிடம் பிரட்டினால், மாவு நன்றாக வெந்துவிடும். மாவு வெந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ள கையில் எடுத்து தொட்டுப்பார்த்தால் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் "கெத்தாக" இருக்க உதவும் 10 விஷயங்கள்...!
உக்களி

இப்போது அந்த மாவில் 3/4கப் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். வெல்லம் நன்றாக மாவுடன் கலந்ததும், 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள், 1 சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து 10 நிமிடம் பிரட்டிக்கொண்டேயிருந்தால் பூந்தி பூந்தியா வந்துடும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி 10 முந்திரியை நன்றாக பொன்னிறமாக வறுத்து அதையும் செய்து வைத்திருக்கும் உக்களியுடன் சேர்த்தால் சுவையான உக்களி தயார். வீட்டிலே ஒருமுறை செஞ்சி பாருங்க.  டேஸ்ட் சும்மா அல்டிமேட்டா இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com