இந்தியர்களிடம் பிரபலமான தென் கொரிய உணவு வகைகள்!

தென் கொரிய உணவு வகைகள்...
தென் கொரிய உணவு வகைகள்...

மீபகாலமாக உலகம் முழுவதும் தென்கொரிய டிராமாக்கள், படங்கள்,  கே பாப் என்று அழைக்கப்படும் பிடிஎஸ், பிளாக் பிங்க் போன்றவற்றின் மோகம் பரவி கிடக்கின்றது. எனினும் இது இந்தியர்களையும் விட்டு வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தென் கொரிய படங்களில் காட்டப்படும் உணவு வகைகள், உடைகள் என்று அனைத்தும் இந்தியாவிலும் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பதிவில் எந்த மாதிரியான தென்கொரிய உணவுகள் இந்திய இளசுகளிடம் பிரபலமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

கிமிச்சி

கிமிச்சி மிகவும் பிரபலமான கொரியன் உணவாகும். இது இந்தியாவில் சாதாரண சூப்பர் மார்க்கெட்களிலேயே கிடைக்கும். பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை செய்வதற்கு முள்ளங்கி, முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்த்து அத்துடன் மசாலாக்கள் கலந்து ஊற வைத்து சாப்பிடுவார்கள். இது நம்ம ஊர் ஊறுகாய் போன்ற உணவு வகையாகும்.

ரேமென்

ரேமென் என்பது வேறேதுமில்லை இன்ஸ்டன்ட் நூடுல்ஸேயாகும். இது இளம் தலைமுறையினரிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சாதாரண கடைகளில் கூட கிடைக்ககூடியதாகும்.  கொரியன் ரேமெனை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதிகளும் உண்டு.

பிங்சூ

கொரியர்களுக்கு இனிப்பு வகைகள் மீது பெரிதாக ஈடுபாடு இல்லையென்றாலும் பிங்சூ அதில் விதிவிலக்காகும். இதில் உறைய வைக்கப்பட்ட பெரிஸ், வெண்ணிலா ஐஸ் க்ரீம், மாம்பழம்,கிவி, ஸ்ட்ராப்பெரி, மாதுளை போன்றவற்றுடன் பெர்ரிகளுடன் சேர்த்து சக்கரை தண்ணீரில் செய்யப்பட்ட சாஸை ஊற்றி கடைந்து ஐஸ்க்ரீமுடன் பரிமாறப்படும்.

கொரியன் பிரைட் சிக்கன்

கொரியன் பிரைட் சிக்கன் சப்பு கொட்ட வைக்கும் அளவிற்கான ஒரு தென்கொரிய உணவாகும். சிக்கனை இரண்டு முறை நன்றாக ப்ரை செய்து அத்துடன் சோயா சாஸ், கார்லிக், தேன் போன்றவற்றை அதன் மீது தடவுவதால் ஒரு பளபளப்பு கிடைக்கும். சுவையும் நாவில் எச்சில் ஊற வைக்க கூடியதாக இருக்கும்.

பிபிம்பாப்

பிபிம்பாப்
பிபிம்பாப்

கொரிய உணவுகளை பற்றி பார்க்கையில் பிரபலமான ‘புத்தா பவுல்’ என்று அழைக்கப்படும் பிபிம்பாப்பை பற்றி கண்டிப்பாக பாக்க வேண்டும். இது பார்ப்பதற்கு மட்டுமே அழகாக இல்லாமல் இதன் சுவையும் தனித்துவமாக இருக்கும். பிபிம்பாப் கற்களால் ஆன பவுலில் பரிமாறப்படும். அதில் சாதம்,காய்கறிகள், முட்டை, கறி,முளைக்கட்டிய பயிர் மற்றும் கொரியர்களின் காரமான சாஸ் ஆகியவை இருக்கும்.

தியோக்போக்கி

இது காரமான அரிசி கேக்காகும். இது பார்ப்பதற்கு பாஸ்தா போன்று காட்சியளிக்கும். இந்த தெருவோர பிரபலமான உணவு வகை கொரியன் படங்களிலும், டிராமக்களிலும் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தியோக்போக்கியில் முக்கியமானதே அதில் போடப்படும் சாஸ் தான். அது அரிசி கேக்குடன் கலந்து சுவை மிகுந்த உணவாக அனைவரின் மனதையும் கவர்ந்துவிடும்.

 மண்டு

கொரியர்களின் மண்டு இங்கிருக்கும் ‘மோமோஸ்’ போன்றதாகும். இதனுள் காய்கறிகள், கறிகளை மற்றும் சிக்கனை சேர்த்து செய்வார்கள். இதை வேகவைத்தோ அல்லது பொரித்தோ சூப்களில் போட்டு தருவார்கள். சில்லி, சோயா சாஸ், வினிகர் அகியவற்றுடன் சேர்த்து செய்யப்பட்ட சாஸூடன் தருவார்கள்.

கொரிய உணவு...
கொரிய உணவு...

கையேரான் மாரி

து கொரியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற முட்டை உணவாகும். மதிய உணவுக்கு டிப்பன் பாக்ஸில் வைத்து தருவார்கள். கையேரான் மாரி என்பது பஞ்சு போன்ற முட்டையாகும். இதை கடாயில் பலமுறை முட்டையை ஊற்றி உருட்டி உருட்டி செய்வார்கள்.

 கம்ஜேஜியான்

ம்ஜேஜியான் கொரியாவில் பிரசித்தி பெற்ற காலை உணவாகும். இதை உருளைக்கிழங்கு, வெங்காயம், உப்பு ஆகியவற்றை வைத்து செய்வார்கள். முதலில் உருளைகிழங்கையும், வெங்காயத்தையும் நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். அதில் உப்பு சேர்த்து பேஃனில் பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் வறுத்து எடுக்க வேண்டும். இத்துடன் சோயா சாஸ், வினிகர், எள் மற்றும் சிறிதாக வெட்டப்பட்ட மிளகாய் ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் சாஸை வைத்து பரிமாறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
எந்த உணவுடன் எதை சேர்த்தால் ஆரோக்கியம் பெருகும் தெரியுமா?
தென் கொரிய உணவு வகைகள்...

ஜாப்சே

நூடுல்ஸ் பிரியர்கள் கண்டிப்பாக ஜாப்சேவை சுவைத்து பார்த்தேயாக வேண்டும். இதை கண்ணாடி நூடுல்ஸ் என்றும் கூறுவார்கள். சக்கரை வள்ளிக்கிழங்கால் செய்வதே நூடுல்ஸ்க்கு கண்ணாடி போன்ற அமைப்பை தருகிறது. இதை நிறைய மசாலாக்களுடன் காய்கறிகள், சாஸ்களுடன் சேர்த்து வறுத்தெடுத்து எள்ளை மேலே தூவி பரிமாறுவார்கள்.

இந்த வகை கொரிய உணவுகள் இந்தியாவில் மிகவும் பிரசித்து பெற்றதாகும். சில உணவுகள் பெரிய ரெஸ்டாரண்ட்களில் கூட விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமில்லாமல் இந்த உணவுகளின் ரெசிப்பிகளை இந்திய முறையில் செய்து உண்டு ரசிக்கிறார்கள் தென் கொரிய மோகம்  கொண்ட இந்திய இளசுகள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com