சோயாவும் மீல் மேக்கரும் ஒண்ணா?

Soybean Meal Maker
Soybean Meal Maker
Published on

"மீல் மேக்கர்" அல்லது ‘சோயா சங்க்ஸ்’ என்ற உணவுப்பொருளானது   சோயா துண்டுகளைத் தான் குறிக்கிறது. 1980கள் மற்றும் 1990களில் பிரபலமடைந்த இந்த சோயா கட்டிகள், அதன் இறைச்சி போன்ற அமைப்பு மற்றும் சுவை காரணமாக இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவுப் பொருளாக மாறியது. அதோடு ஒரு சில அமைப்புகள் இந்தியாவில் சோயா துகள்களை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. ஜூன் 26, 2018 வரையில் ‘வோல்டாஸ் லிமிடெட்’ நிறுவனம் "மீல் மேக்கர்" என்ற வர்த்தக முத்திரையை சொந்தமாக கொண்டு இயங்கியுள்ளது. மீல் மேக்கற்கான உற்பத்தியில் கொரியா நாடு முதல் இடத்தை வகிக்கிறது.

மீல் மேக்கர் தயாரிக்கப்படும் முறை:

சோயாவிலிருந்து எடுக்கப்படும் சோயா சாஸ்,சோயா புரதம், சோயா பால், சோயா எண்ணெய் உள்ளிட்டவை முழுவதுமாக எடுக்கப்பட்டு இறுதியாக அதிலிருந்து  கிடைக்கும் பொருள் தான் மீல் மேக்கர் எனப்படும். இதனை சோயா சக்கை அல்லது சோயா புண்ணாக்கு என்றும் சொல்லலாம்.

மீல் மேக்கர் பெயர்காரணம்:

மமீல் மேக்கர் என்பது ஒரு கம்பெனியின் பெயர். அவர்கள் இதனைத் தயாரித்து மக்களிடையே விற்பனை செய்து மிகவும் பிரபாலமடைந்ததால், இதற்கு மீல் மேக்கர் என்ற பெயரே வந்துவிட்டது. சோயா என்பதற்கு பதில் மீல் மேக்கர் என்றே அழைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மீல் மேக்கர் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?
Soybean Meal Maker

இறைச்சி போன்ற தோற்றம்:

மீல் மேக்கர் பார்ப்பதற்கு இறைச்சி போலவே தான்  இருக்கம். ஏனெனில் இது தயாரிப்பின்பொழுதே இறைச்சி போன்ற வடிவில் இருக்க  வேண்டும் என்பதற்காக சிறு சிறு உருண்டைகளாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.1980-களில் திருமண நிகழ்ச்சிகளில் போடப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் இந்த மீல் மேக்கர் சேர்க்கப்பட்டது. மேலும் இதனுடைய சுவை பிடித்துப் போக அனைவரும் இதனை விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர்.

நஞ்சாகும் அமிழ்தமும்:

மீல் மேக்கரில் புரதச்சத்து அதிகமாக நிறைந்திருந்தாலும்கூட அதனை அளவுக்கு மீறி நம்முடை உணவில்  சேர்த்துக் கொள்வதால் உடலில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண்களை விட ஆண்கள் இதனை அதிகமாக சாப்பிடும் போது அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு  போன்ற பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார்கள். எனவே இதனை அளவோடு சாப்பிடுவது அனைவருக்கும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com