சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஸ்பெஷல் ரெசிபிகள்!

பாசிப்பயறு அடை
பாசிப்பயறு அடை

பாசிப்பயறு அடை!

தேவையானவை:

த்து மாவு -2கப், முளைக்கட்டிய பாசிப்பயறு -3/4கப்,பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/4கப், பூண்டு -1டேபிள்‌ஸ்பூன், கருவேப்பிலை,மல்லி, மிளகாய் 2-3, உப்பு, எண்ணெய் -தேவைக்கு.

செய்முறை:

பாசிப்பயறுடன், மிளகாய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இதனுடன் சத்துமாவு சேர்த்து, உப்பு, வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.விருப்பமெனில் சோம்புத் தூள் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து,சூடான  தோசைக்கல்லில் சின்ன அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.கார சட்னியுடன் இந்த அடையை சாப்பிட சுவையாக இருக்கும்.காலை நேரத்தில் சாப்பிட இதனுடன் காய்கறிகளை சேர்த்து கலந்து செய்யலாம்.

நச்சுக் கொட்டை கீரை பொரியல்!

தேவையானவை:

ழுவி நறுக்கிய நச்சுக் கொட்டை கீரை-2கப்,பெரிய வெங்காயம் -1, வறுத்து ப் பொடித்த மிளகுத்தூள், கடுகு-1டீஸ்பூன், உப்பு,தாளிக்க எண்ணெய், சீரகம்.

நச்சுக் கொட்டை கீரை பொரியல்
நச்சுக் கொட்டை கீரை பொரியல்

செய்முறை:

வெங்காய த்தை பொடியாக நறுக்கவும்.சூடான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்துக் கிளறி கீரையை சேர்க்கவும்.தேவையான உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

மிதமான தீயில் கீரை வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி தேவையெனில் ஒரு டேபிள்ஸ்பூன் தே துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். அதிக சத்து நிறைந்தது, உடலுக்கு வலு சேர்க்க கூடியது.

இதையும் படியுங்கள்:
20 களில் பணத்தைச் சேமிக்க ஆறு சிறந்த வழிகள்!
பாசிப்பயறு அடை

முளைக்கட்டிய பாசிப்பயறு சூப்!

தேவையானவை:

முளைக்கட்டிய பாசிப்பயறு -1/2கப், பெரிய வெங்காயம் -1, பூண்டு -4பல்,தனியாத்தூள்-2டேபிள் ஸ்பூன்,பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி, எண்ணெய், உப்பு,தே பால் தேவைக்கு.

பாசிப்பயறு சூப்
பாசிப்பயறு சூப்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.பின் பூண்டு சேர்த்து வதக்கி பின் முளைகட்டிய பயறு சேர்த்து தண்ணீர் விட்டு  வேக விடவும் பாதி வெந்ததும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும்.நன்கு வெந்து விட்டதும் இறக்கி தே பால் ஊற்றி புதினா, கொத்தமல்லி தழை தூவி நன்கு கலந்து பரிமாறவும்.கெட்டியாக வேண்டுமெனில் கார்ன்ஃப்ளோர், அல்லது வெந்து பயறையே அரைத்து சேர்க்க திக்கான சூப்பாக இருக்கும்.சுவையோடு,சத்து தரும் இந்த சூப் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com