குளிருக்கு இதம் தரும் ஸ்பிரிங் ஆனியன் சூப் ரெசிபி!

onion soup
Spring onion soup
Published on

ஸ்பிரிங் ஆனியன் சூப்

தேவையான பொருட்கள்:

1.பட்டர் 2 டேபிள் ஸ்பூன்

2.நறுக்கிய ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதி 1 கப்

3.நறுக்கிய ஸ்பிரிங் ஆனியனின் தண்டுப் பகுதி ½ கப்

4.பொடிசா நறுக்கிய பூண்டுப் பல் 1 டேபிள் ஸ்பூன்

5.பொடிசா நறுக்கிய இஞ்சி 1 டேபிள் ஸ்பூன்

6.சோயா சாஸ் 1 டேபிள் ஸ்பூன்

7.கருப்பு மிளகுத்தூள் 1டீஸ்பூன்

8.கார்ன் ஃபுளோர் 1 டேபிள் ஸ்பூன்

9.வெஜிடபிள் ஸ்டாக் 4 கப்

10.உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாயகன்ற கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதிகளை சேர்த்து, மீடியம் தீயில் வைத்து வதக்கவும். அவை மிருதுவானதும் அதனுடன் காய்கறி வேகவைத்த தண்ணீரை (vegetable stock) சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் கார்ன் ஃபுளோரில் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் சூப்பில் ஊற்றி, தொடர்ந்து கிளறி விடவும். சூப் ஸ்மூத்தான பதத்திற்கு வந்ததும், உப்பு, மிளகுத் தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து 2-3 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். பின் ஸ்பிரிங் ஆனியனின் நறுக்கிய பச்சை நிற தண்டுப் பகுதியையும், ஒரு டேபிள் ஸ்பூன் பட்டரையும் சூப்பில் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி விடவும். குளிர் கால மாலை நேரங்களில் குடித்து மகிழ சுவையான ஸ்பிரிங் ஆனியன் சூப் தயார்.

சுவையான ஸ்பிரிங் ஆனியன் சூப் தயார்

சுவையான மணத்தக்காளி காய் சட்னி ரெசிபி!

தேவையான பொருட்கள்:

1.மணத்தக்காளி காய் 1 கப்

2.உரித்த பூண்டுப் பல் 10

3.உரித்த சின்ன வெங்காயம் 15

4.கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்

5.உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

6.கொத்தமல்லி விதை ½ டீஸ்பூன்

7.சீரகம் ½ டீஸ்பூன்

8.சிவப்பு மிளகாய் 6

9.புளி ஒரு நெல்லிக்காய் அளவு

10.தேங்காய் துருவல் ½ கப்

11.கறிவேப்பிலை 2 இணுக்கு

12.உப்பு தேவையான அளவு

13.எண்ணெய் தேவையான அளவு

14.தண்ணீர் தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
நாக்கில் மணக்கும் காபி... நாவில் கரையும் இனிப்புகள்!
onion soup

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து, அவை சிவந்ததும் கொத்தமல்லி விதை, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து சிறு தீயில் வறுக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்துக்கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அதில் பூண்டுப் பல், வெங்காயம், மணத்தக்காளி காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு சிவந்து வரும் வரை வதக்கவும். பின் அதனுடன் உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து கிண்டிவிட்டு, இன்னொரு கடாயில் வறுத்து வைத்த மசாலாப் பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும். பின் கடாயை கீழே இறக்கிவைத்து ஆறவிடவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, கெட்டி சட்னி பதத்திற்கு மசிய அரைத்தெடுக்கவும். சுவையான மணத்தக்காளி காய் சட்னி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com