புளியோதரை பிரியர்களுக்கு ஒரு கொண்டாட்டம்: கோவில் ஸ்டைல் புளிசாதம் - இதோ எளிய செய்முறை!

puliyodharai-recipe
puliyodharai-recipe
Updated on

ம் வீடுகளில் அன்றாட செய்யும் புளி சாதத்தைவிட கோவிலில் கிடைக்கும் புளி சாதம் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். கோவில் பயணங்களின் போதும், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளின் போதும் புளிசாதம் செய்வது நம்முடைய பாரம்பரியமாகும். புளியில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் செல்களில் உள்ள பாதிப்பை தடுத்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. புளியில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் தொண்டை மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. புளி செரிமானத்தை மேம்படுத்துகிறது. கோவில் ஸ்டைல் புளி சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

அரிசி                          -  1/2 கிலோ

புளி                             -  150 கிராம் 

உளுந்து                     - 2 டீஸ்பூன் 

கடலைப்பருப்பு         - 3  டீஸ்பூன் 

வேர்கடலை               -  4 டீஸ்பூன் 

முந்திரி                       - 5 டீஸ்பூன் 

வரமல்லி                    - 4   டீஸ்பூன்

கருப்பு எள்                -   1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள்             - 3 டீஸ்பூன் 

உப்பு                           - தேவையான அளவு 

வத்தல்                        - 5

மிளகு                          - 3 டீஸ்பூன் 

சீரகம்                          - 2 டீஸ்பூன் 

கடுகு                           - 2 டீஸ்பூன் 

பெருங்காயத்தூள்  - தேவையான அளவு 

நல்லெண்ணெய்     - தேவையான அளவு 

கருவேப்பிலை        -  தேவையான அளவு

நாட்டு சர்க்கரை      - 3 டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் 'பாசிப்பருப்பு உருண்டை': இளமையைத் தக்கவைக்கும் அற்புத உணவு!
puliyodharai-recipe

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். அரிசி நன்கு ஊறியவுடன் தேவையான அளவு நீர் ஊற்றி  வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி குழைந்திட கூடாது. ஒரு வாணலியில் மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கருப்பு எள், கடுகு,பெருங்காயத்தூள், வரமல்லி, வத்தல், கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்து வரும் வரை வறுத்துக் ஆறவைக்கவேண்டும். இவை நன்கு ஆரிய உடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். புளியை ஒரு முறை அலசி 1 மணி நேரம் தேவையான அளவு நீரூற்றி  நன்கு ஊறவைக்க வேண்டும். புளி நன்கு உரிய உடன் கெட்டியாக கரைத்து வடிகட்டி  தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய்,   கடுகு சேர்த்து நன்கு பெறிந்து வந்தவுடன் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வேர்கடலை, முந்திரி, வத்தல், நன்கு சிவந்து  வந்தவுடன் கருவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு, புளி கரைசலை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு ஆரியவுடன் நாம் வடித்து வைத்திருந்த சாதத்தில்  சேர்த்து, நாம் அரைத்து வைத்திருந்த பொடி, அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். சுவை மிகுந்த அனைவரும் விரும்பி உண்ணும் கமகமக்கும் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் புளிசாதம் தயார்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com