ஸ்டஃப்டு குடைமிளகாய் பஜ்ஜி!

குடைமிளகாய் பஜ்ஜி
குடைமிளகாய் பஜ்ஜிwww.youtube.com
Published on

குடை மிளகாய் வைத்து புதிது புதிதான சுவையில் பல உணவுகளை உருவாக்கலாம். அதில் ஒன்றுதான் இந்த வித்தியாசமான அதே சமயம் பாரம்பரியமிக்க ஸ்டஃப்டு குடைமிளகாய் பஜ்ஜி. புதுமையும் பழமையும் இணைந்த இதை செய்து உங்கள் குடும்பத்தினருக்கு இந்த குளிர்காலத்தில் தந்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர்கள் பரிசளிப்பார்கள். ஸ்டப்டு குடை மிளகாய் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய்கள் - (சிறியதாக) நான்கு உருளைக்கிழங்கு- (பெரியது) ஒன்று, கரம் மசாலா- கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் -கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- கால் டீஸ்பூன்
உப்பு - சிறிது
பஜ்ஜி மாவு தயாரிக்க
அரிசி மாவு -ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன்
கான்பிளார் -ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மிளகாய் தூள் -தேவையான அளவு பெருங்காயம் -சிறிது
எண்ணெய் – பொறிக்க

செய்முறை:

ருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து ஆறியதும் துருவியில் நன்கு துருவிக் கொண்டு சிறிது எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது ,கரம் மசாலா, மிளகாய்த்தூள்,  அனைத்தையும் சேர்த்து வதக்கி அதனுடன் துருவிய உருளைக்கிழங்கையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பஜ்ஜி மாவுக்குத் தேவையானவற்றை ஒரு பவுலில் இட்டு நீர் சேர்த்து சிறிது கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
கணினி பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ள AI!
குடைமிளகாய் பஜ்ஜி

வாணலியில் பஜ்ஜி மூழ்கும் அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் குடைமிளகாயை பாதியாக வெட்டி அதில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு செய்து வைத்துள்ள உருளைக்கலவையை அதனுள் வைத்து சிறிது மைதா பேஸ்ட் கொண்டு குடைமிளகாயின் மேல் மூடி பஜ்ஜி மாவினுள் முக்கி காய்ந்த எண்ணெயில்  அதை அப்படியே மெதுவாக போட்டு மெதுவாக பிரட்டி எல்லா பக்கமும் வெந்ததும் எடுக்கவும். இது மாலை ஸ்நாக்ஸ்க்கு ஏற்ற வித்தியாசமான  ஐட்டமாக இது கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com