ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம், நட்ஸ் குலாப் ஜாமூன்- தீபாவளி இனிப்பு!

ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம்- நட்ஸ் குலாப் ஜாமூன்
ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம்- நட்ஸ் குலாப் ஜாமூன்

தேவையான பொருட்கள்

1.குலாப் ஜாமூன் பவுடர் - 200 கிராம்

2.பால் - தேவையான அளவு

3.நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு

4.ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

5.ஸ்ட்ராபெர்ரி ஜாம் - 3 டீஸ்பூன்

6.நட்ஸ்வகைகள் - 2 டீஸ்பூன்

7.சீனி - 300 கிராம்

செய்முறை

1.குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு பால் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

2.10 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்.

3.பின்னர் உருண்டைகளாக உருட்டி கொண்டு விரலால் அழுத்தி அதனுள் சிறிதளவு ஜாம் மற்றும் நட்ஸ் வைக்கவும்.

4.பின்னர் உருண்டைகளை சேர்த்து நன்கு உருட்டிக்கொள்ளவும் .

5.வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் சேர்த்து அதேஅளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

6.ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

பிசுபிசுப்பு பதம் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.

7.மற்றொரு வாணலியில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கவும்.

8.அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். உருண்டைகளை சேர்த்து நன்கு சிவந்த பின்னர் எடுக்கவும்.

9.உருண்டைகளை எடுத்ததும் சூடான சர்க்கரை பாகில் சேர்க்கவும். 3 மணிநேரம் ஊறியபின்னர் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com