சளி, இருமலால் அவதியா? இதோ குளிர்காலத்திற்கேற்ற உணவுகள்!

துவையல்...
துவையல்...www.youtube.com

சீசன்  காலத்தில் கைகொடுக்கும் - கை மருந்துவம் சிலவற்றை பார்க்கலாம் .தூதுவளை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உளுந்து ஆகியவற்றுடன் (புளி, காரம், தேங்காய் சேர்க்காமல்) சிறிது உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து 4 ஸ்பூன் மதிய சாப்பாட்டுடன் சாப்பிட நெஞ்சு சளி அகலும்.

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற கொதிநீரில் 1 ஸ்பூன் கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் கருஞ்சீரகம் அத்துடன் ஒரு வெற்றிலையை கிள்ளிப் போட்டு கொதிக்க வைத்து பின்னர் ஆறியவுடன் வடிகட்டி சாப்பிட சளி வெளியேறும்.

5 கிராம்பு, 2 வெற்றிலையை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது கால் டம்ளர் ஆக வற்றியவுடன் அதனுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட சளி டானிக் போன்று செயல் பட்டு நெஞ்சு சளி கரைந்து சளித்தொல்லை தீரும்.

சுக்கு பொடி-3 ஸ்பூன், மிளகு பொடி-1ஸ்பூன், ஒமவள்ளி இலை ஒன்று இவை மூன்றையும் அரைத்து சாறு எடுத்து காய்ச்சி குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் கொடுத்தால் நெஞ்சு சளி குறையும், பெரியவர்கள் இரண்டு ஒமவள்ளி இலை சேர்த்து 3 ஸ்பூன் சாறு சாப்பிட வேண்டும்.

எலும்பையே சாப்பிட்டு விடும் ஆற்றல் உடையது சளி. இந்த சளியை விரட்டும் ஆற்றல் உடையதுஉடையது முள்ளங்கி. சீரகத் தூள், மிளகுத்தூள், முள்ளங்கி சாறு கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளியை விரட்டலாம்.

தூதுவளை தோசை:

தூதுவளை தோசை:
தூதுவளை தோசை:www.youtube.com

தூதுவளை-1கைப்பிடி, உளுந்து-10 கிராம், சீரகம்-10 கிராம், தோசை மாவு-7 கரண்டி.

தூதுவளை இலையை முள் நீக்கி எடுத்து சுடுநீரில் கழுவி எடுத்து சிறிது நெய் விட்டு வதக்கவும், பிறகு கீரையுடன் உளுந்து, சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட

மூச்சிரைப்பால் கஷ்டப்பட்டு வரும் நோயாளிகளுக்கு இது ஓர் அற்புதமான மருந்து. குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு.

முசுமுசக்கை தோசை:

முசுமுசக்கை தோசை:
முசுமுசக்கை தோசை:www.youtube.com

முசுமுசக்கை கீரை-1 கைப்பிடி, ஏலக்காய்-2, சீரகம்- 10 கிராம், மிளகு-5 ,தோசை மாவு-7 கரண்டி, முட்டை-1 (வெ.கரு மட்டும்).

முசுமுசக்கை கீரை, ஏலக்காய், சீரகம், மிளகு அனைத்தையும் முட்டையின் வெள்ளைக் கரு வோடு சேர்த்து விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட நெஞ்சில் உறைந்து கிடக்கும் சளி அடியோடு வெளிவரும்.

முடக்கத்தான் கீரை அடை:

முடக்கத்தான் கீரை அடை
முடக்கத்தான் கீரை அடைwww.youtube.com

குளிர் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், இருமல், வாத உடல் வலிகள் குறைய முடக்கத்தான் கீரை அடை சாப்பிடலாம்.

புழுங்கல் அரிசி-கால் கிலோ, துவரம் பருப்பு -50 கிராம் இவைகளை ஊறவைத்து எடுத்து அதனுடன் முடக்கத்தான் கீரை-25 கிராம், குப்பை மேனி இலை -15 கிராம், தூதுவளை இலை-10 கிராம், துளசி இலை-10 கிராம், வெள்ளை வெள்ளைப் பூண்டின் -5 பல், மிளகாய்-10 இவை அனைத்தும் சேர்த்து அடை பதத்தில் மாவு ஆட்டி, அதனுடன் சின்ன வெங்காயத்தை அரிந்ததை தேவைக்கு சேர்த்து, சுவைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து தோசைக் கல்லில் அடையாக ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றி எடுத்து அடையாக வாரம் ஒரு முறை சாப்பிட குளிர் காலத்தில் ஏற்படும் அவஸ்தைகள் சரியாகும்.

இதையும் படியுங்கள்:
அப்துல் கலாம் சொன்ன வெற்றிக்கான வழிகள்!
துவையல்...

கைப்பிடி அளவு குப்பை மேனி இலையை கொஞ்சம் சுடுநீரில் மிக்சியில் அடித்து சுறாக்கள் அதை கால் டம்ளர் அளவு சுடுநீரில் கலந்து இரண்டு நாள் மட்டும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நெஞ்சு சளி முழுவதும் வெளியேறி விடும்.

முசுமுசுக்கை இலை 10 கிராம், துளசி 10 கிராம், சீரகம் 5 கிராம் இவற்றை நாட்டு மாட்டு பாலில் அரைத்து 200 மில்லி நாட்டு மாட்டு பாலுடன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர புகைபிடித்தல், மாசுகளால் கெட்டுப்போன நுரையீரல் மீண்டும் பழைய நிலைக்கு வரும். நுரையீரல் சுத்தமாகும், சளி சேராது.

நெஞ்சு சளியை விரட்ட பாலுடன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட சொல்வார்கள். ஆனால் அப்படி சாப்பிடக் கூடாது. வறட்டு இருமல் என்றால் நெய்யுடன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட வேண்டும். கெட்டி சேர்ந்த சளியை கரைக்க மஞ்சள் தூளுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

ஓமம் -50 கிராம், பச்சை கற்பூரம்-10 கிராம், கருஞ்சீரகம்-50 கிராம்  இவற்றை இடித்து ஒரு வெள்ளை துணியில் முடிந்து காலை, மாலை, இரவு என மூன்று முறை 10 நிமிடங்கள் முகர்ந்து மூச்சை உள்ளே இழுத்து வர நுரையீரலில் உள்ள சளியை கரைத்து மூக்கின் வழியாக வெளியேறும்.

தேங்காய் பால் எடுத்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சூடாக்கி மூன்று நாட்கள் இரவு சாப்பிட வர நெஞ்சு சளி குணமாகும். சளி அதிகமாகி மூச்சு விட சிரமப்படுகின்றவர்கள் தூதுவளை, சுண்டைக்காய் இவை இரண்டையும் சிறிது நெய்யில் வதக்கி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட்டு வர மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com