தொண்டைக்கு இதம் தரும் சூப்பர் சூப் வகைகள்!

Super soup varieties that are soothing to the throat!
Variety soups
Published on

ழை நேரத்தில் தொண்டைக்கு இதமாக டீ காபி தவிர்த்து ஏதேனும் பானம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இருக்கவே இருக்கிறது சூப் வகைகள். சில வகைகள் உங்களுக்காக இங்கே..

தக்காளி சூப்
தேவை:

தக்காளி - கால் கிலோ
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பால் - 50 மில்லி
சின்ன வெங்காயம் - 150 கிராம்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று கொத்துமல்லித்தழை - சிறிது

செய்முறை:
கழுவி நறுக்கிய தக்காளியையும் சின்ன வெங்காயத்தையும் நீர் சேர்த்து ஒன்றாக நன்கு வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருகியதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை பொன் வறுவலாக வதக்கி மைதாவையும் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது வடிகட்டி இருக்கும் தக்காளி சூப்பை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின் மறுபடியும் அதை வடிகட்டி தேவையான உப்பு, மிளகு சேர்த்து சற்று ஆறிய பின் பால் சேர்த்து கொத்துமல்லித் தூவி பரிமாறலாம். சூப் அதிக சூடாக இருக்கும்போது பாலை ஊற்றாதீர்கள். பால் திரிந்துவிடும். இந்த சூப்பில் பால் ஊற்றாமலும் குடிக்கலாம்.

பச்சைபட்டாணி சூப்
தேவை:

பச்சை பட்டாணி உரித்தது -  400 கிராம் பட்டாணி தோல்  -சிறிது
பெரிய வெங்காயம்- 2(நறுக்கியது)
பால் - அரைக்கப்
கார்ன்பிளவர் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் காய்கறிகள் வேகவைத்து எடுத்த ஸ்டாக் நீர் -  ஒன்றரை லிட்டர்
ஃபுட் கலர் (பச்சை) - சிட்டிகை
உப்பு மிளகு - தேவையானது
இலவங்கம் - 4
பிரெஷ் கிரீம் அல்லது வறுத்த ரொட்டி துண்டுகள் - மேலே தூவி அலங்கரிக்க

செய்முறை:

வெந்நீரில் கழுவிய பட்டாணி மற்றும் பட்டாணி தோல், வெங்காயம் இவற்றை ஏற்கனவே எடுத்த ஸ்டாக் நீருடன் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் மிக்ஸியில் அடித்து பாத்திரத்தில் வடிகட்டவும்.  வடிகட்டிய சூப்புடன் கார்ன்பிளார் சேர்த்துக் கட்டிகளின்றி  கிளறவும். சூப் கெட்டியானவுடன் பால் தேவையான உப்பு மிளகு நசுக்கிய கிராம்பை சேர்த்து இறக்கவும்.  கிரீம் அல்லது ரொட்டித் துண்டுகளை நெய்யில் பொறித்து பரிமாறும்போது சூப்புடன் சேர்க்கவும்.சுவையான சத்தான சூப் இது.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் சுவையில் வேர்க்கடலை சட்னி-கேரட் தொக்கு செய்யலாம் வாங்க!
Super soup varieties that are soothing to the throat!

சீஸ் சூப்
தேவை:

சீஸ் துருவியது - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2 நீளமாக வெட்டியது பால் - ஒரு மேஜை கரண்டி
தண்ணீர்-  4 கப்
முட்டைகோஸ் -  நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது சிறது
வெண்ணைய் -  இரண்டு டேபிள்ஸ்பூன் மைதா அல்லது அரிசி வடித்த கஞ்சி - ஒன்றரை கப்

செய்முறை:

வெண்ணையை ஒரு பாத்திரத்தில் போட்டு உருகியதும், நறுக்கிய வெங்காயம், மெலிதாக நறுக்கிய கோஸ் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மைதா மாவு சேர்த்து  கட்டி விழாமல் கிண்டி தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இப்போது துருவிய சீசையும் சேர்த்து விடவும். பரிமாறும்போது பால் சேர்த்து தேவையான உப்பு, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com