Surakkai Akki Roti Recipe.
Surakkai Akki Roti Recipe.

‘சுரைக்காய் அக்கி ரொட்டி’ வீட்டிலேயே டேஸ்டியா செய்யலாம் வாங்க!

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் சூடு குறையும், சிறுநீரக கோளாறு வராது. கோடைக்காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், அஜீரண கோளாறு நீங்கும், நாவறட்சி ஏற்படாது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை உண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சக்கரை அளவு குறையும். சுரைக்காய் நரம்பிற்கு புத்துணர்ச்சியை கொடுத்து உடலை வலுப்படுத்துகிறது. இத்தகையை நன்மைகள் கொண்ட சுரைக்காயை வைத்து ஈஸியான சுரைக்காய் அக்கி ரொட்டி செய்யலாம் வாங்க.

சுரைக்காய் அக்கி ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்:

  • துருவிய சுரைக்காய்-1 கப்.

  • துருவிய கேரட்-1

  • நறுக்கிய வெங்காயம்-1

  • சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய்-1

  • கொத்தமல்லி-சிறிதளவு.

  • துருவியை இஞ்சி- சிறு துண்டு.

  • சீரகம்-1 தேக்கரண்டி.

  • பெருங்காயத்தூள்- சிறிதளவு.

  • உப்பு- தேவையான அளவு.

  • அரிசி மாவு-1 கப்.

  • எண்ணெய்- தேவையான அளவு.

சுரைக்காய் அக்கி ரொட்டி செய்முறை விளக்கம்:

முதலில் சுரைக்காயின் தோலை நீக்கி விட்டு துருவி எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் துருவிய சுரைக்காய் 1கப் அதோடு துருவிய கேரட் 1, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, சின்னதாக வெட்டிய பச்சை மிளகாய் 1, துருவிய இஞ்சி சிறு துண்டு, கொத்தமல்லி சிறிதளவு, சீரகம் 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, கடைசியாக அரிசி மாவு 1கப் இவற்றையெல்லாம் சேர்த்துவிட்டு தண்ணீர் விடாமல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
உடலின் 5 முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் ஒரே காய்கறி!
Surakkai Akki Roti Recipe.

காய்கறியில் இருக்கும் தண்ணீரே போதுமானது. நன்றாக அழுத்தி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இப்போது மாவின் மீது சிறிது எண்ணெய்யை தடவி கொள்ளவும். பிறகு தேவையான அளவு மாவை எடுத்துக்கொண்டு பட்டர் பேப்பர் அல்லது வாழை இலையில் சிறிது எண்ணெய்யை தடவி அதன் மீது மாவை வைத்து நன்றாக மெலிதாக தட்டவும்.

இப்போது தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அதில் செய்து வைத்திருந்த மாவை போட்டு நன்றாக இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வேகவைத்து எடுக்கவும். அவ்வளவு தான் கிரிஸ்ப்பியான சுரைக்காய் அக்கி ரொட்டி தயார். நீங்களும் இதை வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்க.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com