ஸ்வீட் கார்ன் கீர்!

ஸ்வீட் கார்ன் கீர்!

Published on

தேவையான பொருட்கள் :

ஸ்வீட்கார்ன் (அல்லது) சாதாரண சோளம் 2 கப் முத்துக்களாக, பால் - 4 கப், தேங்காய்ப் பால் - 2 கப், ஏலக்காய்ப் பொடி - 1 ஸ்பூன், சர்க்கரை – 1¼  கப், ரோஸ்வாட்டர் - 2 ஸ்பூன், பொடித்த நட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

சோள முத்துக்களை சிறிது நீர் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து எடுத்து ஆறியதும் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடிகனமான கடாயில் பாலை விட்டுக் காய்ந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துக் குறைந்த தீயில் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் ஏலக்காய்ப் பொடி, தேங்காய்ப் பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். இத்துடன் பொடித்த நட்ஸ், ரோஸ்வாட்டர் சேர்த்துக் கலந்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி அருந்துவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com