
தேவையானவை:
ஸ்வீட் கார்ன் முத்து - 2 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - அரை கப்
முந்திரி திராட்சை ஏலக்காய் தேவைக்கேற்ப
பசும்பால் - அரைகப்
செய்முறை:
பாசிப்பருப்பையும், சோள முத்துக்களையும் தனித்தனியே வேக வைக்கவும். வெந்ததும் இரண்டையும் கலந்து நெய், சர்க்கரை சேர்க்கவும். கெட்டியாகும் போது பாலை ஊற்றி கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி வைத்தால் சுவையான ஸ்வீட் கான் பொங்கல் தயார்.