நாவில் நீரூற வைக்கும் ஸ்வீட் லவங்க லதா!

லவங்க லதா
லவங்க லதாImage credit - youtube.com

னைவருக்குமே ஸ்வீட் சாப்பிடுவது என்றால் மிகவும் பிடித்த விஷயம் அதிலும் வடநாட்டு இனிப்பு வகைகள் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. அதில் ஒன்றுதான் இந்த லவங்க லதா. லவங்கம் என்பது மசாலா பொருட்களை சேர்க்கப்படும் ஒரு பொருள் இதில் பலவிதமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

கிராம்பு எனப்படும்  இலவங்கம் வாந்தியைக் கட்டுப்படுத்தும். பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டும். வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்மையான சதைப் பகுதியில் உண்டாகும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம்  பயன்படுகிறது. பல் வலியின்போது லவங்க தைலத்தைப் பஞ்சில் நனைத்து மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் வலி குறையும். லவங்கத்தில் அடங்கியுள்ள “யூஜினால்” என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். லவங்கம் இயற்கையில் வயிற்றுப் பூச்சிக்கொல்லியாகவும் உதவுகிறது என்கிறது மருத்துவம்.

மேலும் பல நன்மைகளைத் தரும் லவங்கத்தை நாமும் தினமும் நம் உணவில் சேர்ப்போம். குழந்தைகளுக்கு இப்படி ஸ்வீட் வகையில் கலந்து தருவோம். இனி லவங்க லதா செய்முறை பார்ப்போம்.

தேவை:
கெட்டிப்பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - ஒரு கிலோ
(கிராம்பு) லவங்கம்- 30
டால்டா அல்லது ரீபைண்ட் ஆயில் -கால் கிலோ
நெய் -  இரண்டு மேஜை கரண்டி
மைதா -கால் கிலோ
சோடா போட்டு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்  - 10

செய்முறை:
கால் கிலோ சர்க்கரை சேர்த்து பாலை மிதமான தீயில் கைவிடாமல் கிளறி வற்றக் காய்ச்சவும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து  சிறு வில்லைகளாக செய்து கொள்ளவும். (கோவா ரெடி)

மைதாமாவில் சோடா உப்பு, நெய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அதையும் அதே எண்ணிக்கையில் உருண்டைகளாக  செய்து மெல்லிய அப்பளமாக இட்டு நடுவில் கோவா வில்லைகளை வைத்து எதிரும் புதிரும் ஆக நான்கு புறமும் மடித்து பிரியாமல் இருக்க அதன் நடுவில் கிராம்பை குத்த வேண்டும். இதை செய்யும்போது மென்மையாக உருண்டை உடையாமல் கவனமாக இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனதை உறுதியைப் பெற வைக்கும் 5 வழிகள்!
லவங்க லதா

டால்டா அல்லது ஆயிலை அடுப்பில் மிதமான தீயில் வைத்து  லவங்க லதாதாக்களை போட்டு சிவக்காமல் திருப்பி விட்டு பொரித்துக் கொள்ளவும். மீதமிருக்கும் சர்க்கரையை முற்றிய பாகுப்பதம் வரும் வரை காய்ச்சி அதில் பொரித்து வைத்திருக்கும் லவங்க லதாதாக்களை நான்கு நான்காக போட்டு ஊறியவுடன் எடுக்கவும்.

இந்த ஸ்வீட் வடஇந்தியாவில் பிரபலம். லவங்க மணத்துடன் பார்க்கவும் ருசிக்கவும் ரிச்சாக இருக்கும்.

குறிப்பு- தேவைப்பட்டால் சிறிது புட்கலர் சர்க்கரைப் பாகில் சேர்க்கலாம். கோவா பதம் முக்கியம். டால்டா அவரவர் விருப்பம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com