எளிமைக்கு இனிமையாய் சர்க்கரை அதிரசமும் - கப் இட்லியும்!

healthy cup idly...
adhirasam - cup idly recipes
Published on

திரசம் என்றால் அனைவரும் வெல்லப் பாகில்தான் செய்வோம். அவசரத்துக்கு சில நேரங்களில் சீக்கிரமாக செய்ய வேண்டுமென்றால் சர்க்கரை அதிரசம் உசிதமாக இருக்கும். அதன் செய்முறை விளக்கத்தைப் பற்றி  இதோ:

சர்க்கரை அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:

பதப்படுத்திய பச்சரிசி மாவு -இரண்டு கப்

சர்க்கரை -ஒன்றரை கப் 

ஏலத்தூள் -அரை டீஸ்பூன்

எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

 செய்முறை:

கடாயில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் வரை நீர்விட்டு பாகு காய்ச்சவும். கொதித்துக் கொண்டிருக்கும் பாகை சிறிது நீரில் விட்டு எடுத்தால் தளதளவென்று தக்காளி பதத்திற்கு இருக்கும். அதை அடுப்பிலிருந்து இறக்கி பதப்படுத்திய பச்சரிசி மாவில் சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். ஏலப்பொடி சேர்த்து நன்றாக சர்க்கரை மாவில்  கலக்கும்படி கிளறிவிட்டு எடுத்து வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை அதிரசமாகத் தட்டி எண்ணெயில்போட்டு பொரித்து எடுக்க வேண்டியதுதான். இரண்டு டபராக்களுக்கு இடையில் சுட்ட அதிரசத்தை வைத்து அழுத்தினால் எண்ணெய் வழிந்து விடும். எடுத்து  சுவைக்கலாம்.

ரவை பணியாரம்

செய்ய தேவையான பொருட்கள்:

ரவை - ஒன்னரை கப்

தேங்காய்ப் பால் - ஒரு கப்

சர்க்கரை- அரைக்கப் 

மைதா ரெண்டு- டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள்- அரை டீஸ்பூன்

எண்ணெய்- தேவையான அளவு

உப்பு தேவையானது

 செய்முறை:

தேங்காய் பாலில் ரவையை 10 நிமிடம் ஊறவைக்கவும். மிக்ஸியில் சர்க்கரையுடன் சேர்த்து நைசாக அரைக்கவும். அதனுடன் மைதா ,அரிசி மாவு, ஏலத்தூள், உப்பு சேர்த்து தோசைமாவு பதத்துக்கு கரைக்கவும். குழி பணியார சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் மாவை ஊற்றி திருப்பி விட்டு எடுத்தால் சுவையான தேங்காய்ப்பால் ரவை பணியாரம் ரெடி. சீக்கிரம் செய்து அசத்தலாம். 

இதையும் படியுங்கள்:
புதிய சுவையில் ஆரோக்கியமான சமையல் ரெசிபிகள் செய்து அசத்துங்க..!
healthy cup idly...

கப் இட்லி

தேவையான பொருட்கள்:

பச்சரிசி புழுங்கல் அரிசி தலா- ஒரு கப் 

உளுந்து ஒன்றரை-கப் 

மிளகு, சீரகம், மல்லி விதை, சுக்கு பொடி தலா- ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் -சிறிதளவு

கருவேப்பிலை -ஒரு ஆர்க்கு

எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து ஆகியவற்றை ஒரு மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைக்கவும். இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும் .மாவு நன்றாக பொங்கியதும் கடாயில் எண்ணெய்விட்டு பொடித்த மிளகு, சீரகம், மல்லி விதை, சுக்குப் பொடி, பெருங்காயம்  கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மாவில் சேர்க்கவும். கப்புகளில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஆவியில்15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.  கப் இட்லி ரெடி. மிளகு சீரகம் மல்லி விதை சுக்கு சேர்ந்திருப்பதால் தீபாவளி சமயத்தில் செரிமானத்திற்கு சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com