டக்கரா சுவைக்கலாம் டபுள் பீன்ஸ் கோதுமை ரவை புலாவ்!

கோதுமை ரவை புலாவ்...
கோதுமை ரவை புலாவ்...

ன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் உடலுக்கு பல சத்துக்களை தர வல்ல ஒரு காய் வகையாக பீன்ஸ் இருக்கிறது.  பட்டர் பீன்ஸ் எனப்படும்  டபுள் பீன்ஸில் உள்ள அதிகளவு கால்சியம், மக்னீசியம் சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவி அவற்றை வலுவாக்குகிறது.

கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய பீன்ஸ் வகைகளை உணவுகளில் அடிக்கடி சேர்த்து உடல் எடையை குறைத்து செரிமானத்தை எளிதாக்கலாம்.  டபுள் பீன்சில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றி இதய பாதிப்புகளைத் தடுக்கிறது.
இத்தனை சத்துக்கள் கொண்ட டபுள் பீன்ஸ் பயன்படுத்தி எளிதில் செய்யக்கூடிய குழந்தைகளும் விரும்பும் டக்கரான கோதுமை ரவை புலாவ் செய்முறை இங்கு.

தேவையானவை:
கோதுமை ரவை- 1 கப்,
டபுள் பீன்ஸ் - 100 கிராம்,
வெங்காயம் -3
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 3
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பட்டை- 1
லவங்கம்- 3
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மல்லி, புதினா - 1கைப்பிடி,
எண்ணெய் - 2 டே. ஸ்பூன்
உப்பு- தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
இந்த 5 உணவுகளை உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்! மீறி சாப்பிட்டா? 
கோதுமை ரவை புலாவ்...

செய்முறை:
முதலில் கோதுமை ரவையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது வறுத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலையுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து நீளமாக நறுக்கிய பச்சை மிளகாயுடன் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அதிலேயே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்தூள், கெட்டித்தயிர், புதினாவை சேர்த்து கிளறிவிட்டு உரித்து கழுவி வைத்திருக்கும் டபுள் பீன்ஸ் மற்றும் வறுத்த ரவை சேர்த்து ஒன்றுக்கு 2 கப் தண்ணீருடன்  மிதமான தீயில் 10 நிமிடம் மூடி போட்டு வெந்ததும் மேலே கொத்துமல்லி தூவிப் பரிமாறலாம்.


குறிப்பு- இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டிச்சட்னியும், வெங்காய ரைத்தாவும் கரெக்ட் சாய்ஸ். நெய் சேர்ப்பது. அவரவர் விருப்பம் அரிசி தவிர்த்து சத்தான இந்த கோதுமை ரவையில் வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com