தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! இந்த 4 சூப்பர் பாயசம் செஞ்சு பாருங்க!

4 Types of Payasam Tamil New Year Special
4 Types of Payasam Tamil New Year Special

1. நிலக்கடலை பாயசம்:

Groundnut Payasam
Groundnut Payasam

தேவையான பொருட்கள்:

நிலக்கடலை -50 கிராம்

வெல்லம் (அ) சீனி - 150 கி .

 தேங்காய்ப் பால் (அ) பால்- 250 மில்லி

 ஏலக்காய், பச்சைகற்பூரம், முந்திரி,திராட்சை        

செய்யும் விதம்:

நிலக்கடலையை வறுத்துக்கொண்டு சிகப்புத் தோலை நீக்கிய பிறகு அரைத்துக் கொண்டு (அரைத்த விழுது 2 கப் இருக்கட்டும்) அதை அடுப்பில் இளம் சூட்டில் வைத்து கைவிடாமல் கிளறி, வெந்த பிறகு சர்க்கரை அல்லது வெல்லம் போட்டுக் கரைந்த பின், ஒரு கொதி வந்தவுடன் தேங்காய்ப்பால் (அ) பால் விட்டு, வழக்கம் போல் வறுத்த முந்திரி, திராட்சை. ஏலக்காய், பச்சை கற்பூரம் போட்டு இறக்கிவிட வேண்டும்.

2. தினை மாவு பாயசம்:

Millet flour payasam
Millet flour payasam

தேவையான பொருட்கள்:

முளை கட்டிய தினை-50 கிராம்

சீனி - 150 கிராம்

பால் - 1 1/2 டம்ளர்

திராட்சை - 10

முத்திரி 10

ஏலக்காய், பச்சை கற்பூரம்.

செய்யும் விதம்:

முளை கட்டிய தினையை முதலில் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவேண்டும். ½டம்ளர் தண்ணீரை உறுளியில் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்தவுடன் தினை மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, கைவிடாமல் கிளறி நன்றாக வெந்ததும் காய்ச்சிய பாலை விட்டு இறக்கி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பச்சை கற்பூரம் போட வேண்டும்.

3. கேழ்வரகு பாயசம்:

Kezhvaragu payasam
Kezhvaragu payasam

தேவையான பொருட்கள்:

முளை கட்டிய கேழ்வரகு - 50கி

சீனி - 150 கிராம்

பால் - 1 1/2 டம்ளர்

திராட்சை - 10

முத்திரி - 10

ஏலக்காய், பச்சை கற்பூரம்.

செய்யும் விதம்:

முளை கட்டிய கேழ்வரகை முதலில் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 டம்ளர் தண்ணீரை உறுளியில் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதிவந்ததும் கொஞ்சம்கொஞ்சமாகக் கேழ்வரகு மாவைப் போட்டு, கைவிடாமல் கிளறி, வெந்ததும் காய்ச்சிய பாலைவிட்டு இறக்கி முந்திரி, திராட்சை, ஏலக்காய், பச்சை கற்பூரம் போட வேண்டும்.

4. தேங்காய்ப் பால் பாயசம்:

Coconut milk payasam
Coconut milk payasamImg Credit: Webdunia

தேவையான பொருட்கள்:

தேங்காய் (முற்றியது)-1

வெல்லம் 200 கிராம்

திராட்சை - 10

முந்திரி - 10

ஏலக்காய், பச்சை கற்பூரம்.

செய்யும் விதம்:

தேங்காயை நன்றாகத் துருவி முதல் இரண்டு தடவைகளிலும் கெட்டியான பாலைப் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்றாவது தடவையாக டம்ளர் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் தடவை எடுத்தபாலை உருளியில் விட்டு, வெல்லத்தையும் போட்டு, நன்றாகக் கரைத்து ஒரு கொதி வந்தவுடன் எடுத்து, கொஞ்சம் ஆறியதும் முதல் இரண்டு கெட்டிப் பாலை விட்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய், பச்சை கற்பூரம் போடலாம். பிறகு அடுப்பில் வைக்கக் கூடாது. நீர்த்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com