தேவையான பொருட்கள்:
பெரிய மாம்பழம்-1
சர்க்கரை - 150 கிராம்.
பால்-1½ டம்ளர்
முந்திரி-10
திராட்சை- 10
ஏலக்காய், பச்சை கற்பூரம்.
செய்யும் விதம்:
மாம்பழத்தைத் தோல், கொட்டை நீக்சிச் சிறிய துண்டங்களாகச் செய்து, பிறகு சர்க்கரையையும், மாம்பழத்துண்டங்களையும் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இரண்டும் நன்கு கலந்து கொதித்த பிறகு, காய்ச்சிய பால் விட்டு இறக்கி, திராட்சை முந்திரி பச்சை கற்பூரம், ஏலக்காய் போட வேண்டும்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 50 கிராம்
பால்-1½டம்ளர்
முந்திரி - 10
திராட்சை -10
பச்சை கற்பூரம்,ஏலக்காய்
செய்யும் விதம்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு, ஆவியில் வேக வைத்து, நன்கு மசித்தபிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். இரண்டும் நன்கு சேர்ந்த பிறகு காய்ச்சிய பாலை விட்டு கொதி வந்தவுடன் இறக்கி திராட்சை, முந்திரி பச்சை கற்பூரம், ஏலக்காய் போட வேண்டும்.
Carrot Payasamதேவையான பொருட்கள்:
கேரட் -1 (பெரியது)
சர்க்கரை-150 கிராம்
பால் - 1 1/2 டம்ளர்
முந்திரி- 10
திராட்சை - 10
ஏலக்காய்,பச்சை கற்பூரம்.
செய்யும் விதம்:
கேரட்டை தேங்காய்த் துருவியில் சீவி ஆவியில் வேகவிட்டு கொள்ள வேண்டும். பிறகு கேரட்டையும் (வெந்தது) சீனியையும் போட்டு அடுப்பில் வைத்து உருளியில் கிளற வேண்டும். நன்றாகச் சேர்ந்து கொதி வந்தவுடன் காய்ச்சிய பாலை விட்டு இறக்கி வறுத்த திராட்சை முந்திரி, ஏலக்காய், பச்சை கற்பூரம் போட வேண்டும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் (பெரியது)1
சர்க்கரை -150 கிராம்
பால்-11/2 டம்ளர்
முந்திரி-10
திராட்சை - 20
ஏலக்காய், பச்சை கற்பூரம்
செய்யும் விதம்:
பீட்ரூட்டை தோலை நீக்கியதும் தேங்காய்த் துருவியில் பொடிப் பொடியாகச் சீவி எடுத்து, அவைகளை ஆவியில் வேகவிட்டதும் வெந்த பீட்ரூட், சர்க்கரை சேர்த்து உருளியில் போட்டு, அடுப்பில் ஏற்றி கிளறி, இரண்டும் நன்றாகச் சேர்ந்து கொதித்தவுடன், பாலை விட்டு, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய், பச்சை கற்பூரம் போடலாம்.
தேவையான பொருட்கள்:
முளை கட்டிய சோயா பீன்ஸ் 50 கிராம்
சீனி - 150 கிராம்
திராட்சை - 10,
முந்திரி -10
ஏலக்காய், பச்சை கற்பூரம்.
செய்யும் விதம்:
முளை கட்டிய சோயா பீன்ஸை முதலில் வறுத்து மாவு ஆக்கிக் கொள்ள வேண்டும். பிறகு 12 டம்ளர் தண்ணீரை உருளியில் விட்டு அடுப்பிலேற்றி கொதி வந்தவுடன் சோயா பீன்ஸ் மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கைவிடாமல் கிளறி நன்றாக வெந்ததும் சீனியைப் போட்டு, கரைந்து கொதி வந்ததும் காய்ச்சிய பாலை விட்டு இறக்கி, திராட்சை, முந்திரி, ஏலக்காய், பச்சை கற்பூரம் போட வேண்டும்.