டீ டைம் ஸ்பெஷல்: வீட்டில் செய்த காம்போ குக்கீஸ்!

Cookies
Cookies
Published on

அன்றாடம் நமது டீ டைம் களில் உபயோகப்படுத்துவது பிஸ்கட் அயிட்டங்களே. காபி பார்கள் சென்றால் பலரும் காபி டீ க்ளாஸ் ஒரு கையிலும் மறுகையில் பிஸ்கட்டுமாக இருப்பதைக் காணலாம். இதுவே அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீஸ் எனப்படுகிறது.

குக்கீஸ் என்றால் சிறிய தட்டையான பேக் செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகையாகும். இதில் வழக்கமாக பால், மாவு, முட்டை மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். வட அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள ஆங்கிலம் பேசும் அநேக நாடுகளில் இதற்கான பொதுப்பெயர் பிஸ்கட் என்பதால் நாமும் இதை பிஸ்கட் என்கிறோம், என்கிறது குக்கீ குறிப்புகள்.

இந்த விடுமுறைக்கு (ஓவன் இருந்தால்) வீட்டிலேயே செய்து பிள்ளைகளுடன் பெரியவர்களையும் குஷிப்படுத்த இங்கே சில குக்கீஸ் ரெசிபிகள்.

1. குக்கீஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பொடித்த சர்க்கரை- 100 கிராம்

மைதா - 250 கிராம்

தண்ணீர் - 1/4 கப்

பால் - 1/2 கப் + 3 டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - 3/4 டீஸ்பூன்

குக்கீஸ் செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் விட்டு அடுப்பல் வைத்து மிதமான தீயில் கரையும் வரை கிளறவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும். அதில் சர்க்கரை தண்ணீர், பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசையவும் . வெண்ணெயுடன் 3 டேபிள்ஸ்பூன் பால் கலந்து கலவையாக்கவும். பிசைந்த மாவை ஒரு இன்ச் கனத்திற்கு சின்ன சின்ன பூரிகளாக திரட்டி வெண்ணெய் பால் கலவையை மேலே பூசி ஓவன் ட்ரேயில் பிஸ்கட்டுகளை இடைவெளி விட்டு அடுக்கி 1800°C வெப்பத்தில் 12 முதல் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

2. வேர்க்கடலை குக்கீஸ் தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 3/4 கப்

சர்க்கரை - 1 கப் பொடித்தது

வறுத்த வேர்க்கடலை - 1 கப்

மைதா - 1 1/2 கப்

பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்

முட்டை - 1

பால் - சிறிது

உப்பு - 1 சிட்டிகை

வெனிலா அல்லது பிடித்த எஸன்ஸ் - 1 டீஸ்பூன்

வேர்க்கடலை குக்கீஸ் செய்முறை:

மைதாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு சிட்டிகை போட்டு இரண்டு அல்லது மூன்று முறை சலித்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை நைசாக இல்லாமல் கொரகொரவென மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வெண்ணெயையும் பொடித்த சர்க்கரையும் நுரைக்க அடித்து அதனுடன் முட்டை மற்றும் எசன்ஸ் சேர்த்து அடிக்கவும். பிறகு மைதாவுடன் முக்கால்பங்கு வேர்கடலை சேர்த்து தேவைப்பட்டால் பால் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மீதி இருக்கும் வேர்க்கடலை தூளில் பிரட்டி 1800°C வெப்பத்தில் 10 அல்லது 15 நிமிடங்கள் ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கிய உருண்டைகளை பேக் செய்து எடுக்கவும். இந்த குக்கீஸ் மிகவும் கரகரப்பாக இருக்கும். இந்த குக்கீஸை உருண்டைகளாக உருட்டி லேசான தட்டைகளாக்கியும் பேக் செய்து எடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சுவையான ராகி குக்கீஸ் செய்யலாம் வாங்க!
Cookies

3. தேங்காய் குக்கீஸ் தேவையான பொருட்கள்:

மைதா - 3/4 கப்

துருவிய கொப்பரை தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்

பொடித்த சர்க்கரை - 1/2 கப்

வெண்ணெய் அல்லது டால்டா - 1/3 கப்

தேங்காய் குக்கீஸ் செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெண்ணையை பொங்கி வரும் அளவு நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து அடிக்கவும். பின்பு துருவிய கொப்பரை தேங்காயும் மைதாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பிறகு அரை இன்ச் கனத்திற்கு மாவை உள்ளங்கையால் தட்டி பிஸ்கட் கட்டரால் வெட்டி வெண்ணெய் தடவி டிரைவில் அடுக்கி 1800°C வெப்பத்தில் ஓவனில் 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும் பிஸ்கட்டை டிரெயில் அடுக்கும்போது அரை இன்ச் இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக அடுக்கவும் ஏனெனில் பிஸ்கட் வேகும்போது சற்று பெரியதாக மாறும்.

குறிப்பாக குக்கீஸ் செய்வதற்கு ஒரே முறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது. ட்ரேயில் இடைவெளி விடுவதும் சரியான அளவுகளும் குக்கீஸை சரியான பதத்தில் வர வைக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் 'கார்ன்ஃப்ளேக்ஸ் குக்கீஸ்' செய்யலாம் வாங்க!
Cookies

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com