ஓவன் இல்லாமல் செய்யக்கூடிய ஈஸியான கேக் வகைகள்!

Easy cake types!
Tasty cake recipes
Published on

பட்டர்  கேக்

தேவையான பொருட்கள்:
மைதா - கால் கிலோ
சர்க்கரை - கால் கிலோ
வெண்ணெய்- கால் கிலோ.
முட்டை -ஐந்து.
ஆரஞ்சு ஜூஸ் அல்லது லெமன் ஜூஸ்  அரை ஸ்பூன் முட்டை வாடை தெரியாமலிருக்க
பேக்கிங்  பவுடர் - ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா  -ஒரு ஸ்பூன்
இரண்டு சிட்டிகை உப்பு.
வெனிலா எஸன்ஸ் -அரை ஸ்பூன்
முந்திரி திராட்சை  டூட்டி ப்ருட்டி தேவையான  அளவு.

செய்முறை:

ர்க்கரையை பொடிக்கவும். மைதா  பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா, உப்பு நான்கையும் நன்றாக கலக்குமாறு  இரண்டு  மூன்று முறை  சலிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து  பீட்டர் அல்லது மத்தில் கடையவும். பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.முட்டையை மிக்ஸியில் அடித்துச் சேர்த்து, எஸன்ஸ், ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.மைதா கலவையைச் சேர்த்து  ஒரே பக்கமாக கலக்கவும்.தயிர் மாதிரி திரிந்த பக்குவத்தில் நட்ஸ்களைச் சேர்க்கவும். எண்ணெய் தடவி பாத்திரத்தில்  முக்கால்  அளவிற்கு ஊற்றவும். குக்கர் தட்டானால் இரண்டு தட்டு அளவிற்கு வரும். இரண்டு முறை பேக் செய்யவும்.

குக்கரில் மணல் சேர்த்து சூடானதும் கலவை சேர்த்த குக்கர்  தட்டை வைத்து குறைந்த தீயில் நாற்பது  நிமிடங்களுக்கு  வேக விடவும்.அவனில்  180 டிகிரி சூட்டில் அரை மணி நேரத்திற்கு பேக்  செய்யலாம்.ஆறியபின் துண்டுகள்  போடவும்.வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

கேரட் கேக்

தேவையான பொருட்கள்:
மைதா - இரண்டு கப்
சர்க்கரை  -ஒரு கப்
ரீபைண்ட் ஆயில் -அரை கப்
முட்டை -ஐந்து.
கேரட் துருவியது  -ஒன்றரை கப்
ஆரஞ்சு ஜூஸ் அல்லது லெமன் ஜூஸ்  அரை ஸ்பூன் முட்டை வாடை தெரியாமலிருக்க
பேக்கிங்  பவுடர்-  ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா - ஒரு ஸ்பூன்
பட்டை பவுடர் -அரை ஸ்பூன்.
இரண்டு சிட்டிகை -உப்பு.
வெனிலா எஸன்ஸ் -அரை ஸ்பூன்
முந்திரி திராட்சை   தேவையான  அளவு.

இதையும் படியுங்கள்:
மூன்று சுவைகளில் வெள்ளை பூசணிக்காய்: அசத்தலான ரெசிபிகள்!
Easy cake types!

செய்முறை:

ர்க்கரையை பொடிக்கவும். மைதா  பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா, உப்பு நான்கையும் நன்றாக கலக்குமாறு  இரண்டு  மூன்று முறை  சலிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை மிக்ஸியில் அடித்துச் சேர்த்து, எஸன்ஸ், ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பொடித்த சர்க்கரை பட்டைப்பொடியை சேர்த்துக் கலக்கவும். மைதா கலவையைச் சேர்த்து  ஒரே பக்கமாக கலக்கவும்.

கேரட் சேர்த்து ஒரே பக்கமாக மடித்துக் கலக்கவும். நட்ஸ்களைச் சேர்க்கவும். எண்ணெய் தடவி பாத்திரத்தில்  முக்கால்  அளவிற்கு ஊற்றவும். குக்கர் தட்டானால் இரண்டு தட்டு அளவிற்கு வரும். இரண்டு முறை பேக் செய்யவும்.

குக்கரில் மணல் சேர்த்து சூடானதும் கலவை சேர்த்த குக்கர்  தட்டை வைத்து குறைந்த தீயில் நாற்பது  நிமிடங்களுக்கு  வேகவிடவும். அவனில்  180 டிகிரி சூட்டில் அரை மணி நேரத்திற்கு பேக்  செய்யலாம். ஆறியபின் துண்டுகள்  போடவும். வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

-ஷெண்பகம் பாண்டியன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com