அரைத்துவிட்ட பூண்டுக்குழம்பு ரெசிபி!

பூண்டுக்குழம்பு
பூண்டுக்குழம்புtamil.webdunia.com
Published on

பூண்டுக்கென மகத்தான மருத்துவ பலன்கள் அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். வாரம் ஒரு முறையாவது பூண்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல், சுவாசப் பிரச்சினை, வாய்வு உபாதைகள், பசியின்மை போன்ற பல பாதிப்புகளைத் தடுக்கலாம். உடல் நலம் தரும் பூண்டு செலவுக்குழம்பு வைக்கும் முறை இதோ.

தேவையான பொருட்கள்:
கெட்டியான பூண்டு  - நான்கு கட்டிகள் தேங்காய் - ஒரு கப்
வரமிளகாய் -நான்கு
கொத்தமல்லி தூள் -ஒரு சிறிய கப் அல்லது நான்கு ஸ்பூன்
சின்ன வெங்காயம்  - 10
தக்காளி -ஒன்று
புளிக் கரைசல் - தேவையான அளவு.
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டே. ஸ்பூன்
கறிவேப்பிலை- தாளிக்க

செய்முறை:
பூண்டுகளை உரித்து நன்கு கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளிகளை  பொடி பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காயுடன் வறுத்த வர மிளகாய் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்று அரைக்கவும். (கொத்தமல்லி தூள் என்பது கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே பட்டை சோம்புடன் வறுத்து அரைத்து தயாரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்) அந்த அரைத்த மசாலாவை தனியாக எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வைத்த இரும்பு கடாயில் தேவையான நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு தாளித்து கருவேப்பிலையுடன் பூண்டுகளைப் போட்டு வதக்கவும். கூடவே வெங்காயத்தையும் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை போட்டு நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற்றவும்.

இதையும் படியுங்கள்:
பூமியில் தங்கம் எப்படி உருவானது தெரியுமா? 
பூண்டுக்குழம்பு

இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை போடவும். இந்த குழம்புக்குத் தேவையான அளவு புளியை கரைத்து ஊற்றவும் குழம்பு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் சூழ்ந்து கெட்டியானதும் இறக்கி சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் குளிருக்கு இதமாக சுவை அள்ளும்.


பி. கு- தேவைப்படும் பட்சத்தில் பட்டை கிராம்பு சோம்பு சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com