
தேவையானவை:
அரிசி - 2 கப்
சமையல் எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்
நெய்-1 டேபிள்ஸ்பூன்
ஜீரகம்-1/2 ஸ்பூன்
வெந்தயம்-1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு 10
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
வெங்காயம் - சிறியது 1
பச்சை மிளகாய்-4
மல்லி தழை நறுக்கியது 1/4 கப்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் நெய் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் ஜீரகம், வெந்தயம், போட்டு பிறகு நீள வாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம், வதக் கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை விட்டு, முந்திரிப் பருப்பு, கரம் மசாலா மல்லித்தழை சேர்த்து வதக்கி அதனுடன் கழுவி வடித்து பத்து நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு குக்கரில் 3 1/2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும் .மூன்று விசில் வந்ததும் சிம்மில் வைத்து இறக்கவும். நேரடியாக குக்கரில் தாளித்தும் செய்யலாம். ஆறியதும் குக்கரை திறந்து ஒரு கிளறு, கிளறி விட்டு எடுத்தால் சூப்பரான ஜீரா ரைஸ் ரெடி.
சாப்பிடும் போது சிறிது நெய் ஊற்றி சாப்பிட நன்றாக இருக்கும். டால் செய்து அதனுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
-ஜீவிதா, சென்னை.