கடலைப்பருப்பு வெல்லம் சோ்த்து இனிப்பு போளி செய்வது போல காரபோளியும் செய்யலாம்
தேவையான பொருட்கள்:
கடலைகப்பருப்பு 50கிராம்
உளுத்தம்பருப்பு 50கிராம்
பயத்தம்பருப்பு 25கிராம்
முந்திரி 15
மைதாமாவு 2 கப், பெரியவெங்காயம் 2,
கடுகு ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி கொஞ்சம் ,
உப்பு , நல்லெண்ணெய் தேவைக்கேற்ப,
உருளைக்கிழங்கு 10
கேரட் 5 , ப.மிளகாய் 4 ,
மல்லி ,கருவேப்பிலை, புதினா கொஞ்சம்,
செய்முறை:
உருளை, கேரட், பருப்பு வகைகளை வேகவைத்துக்கொண்டு தோல் உரித்து பின்னா் அனைத்தையும் உப்பு சோ்த்து மாவாய் பிசைந்து கொள்ளவும். முந்திரியை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய், வெங்காயம்(நறுக்கியது), கடுகு, மஞ்சள் பொடி, மல்லி, கறிவேப்பிலை, புதினா இவைகளைப் போட்டு, வதக்கி வரும்போது உருளை, கேரட் பருப்பு வகை பிசைந்ததை போட்டு முந்திரி சோ்த்து துளி தண்ணீா் கலந்து, பூரணம் மாவு போல கிளறி சூடு ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
மைதாமாவில் தண்ணீா் எண்ணைய் விட்டு பிசைந்து அரைமணி கழித்துவாழை இலையில் எண்ணெய் தடவி போளிக்கு தட்டுவது போல செய்து அதில் பூரணம் வைத்து தட்டவும். பின்னா் தோசைக்கல்லில் நல்லெண்ணைய் விட்டு, இரண்டு பக்கமும் புரட்டிப்போட்டு எடுக்கவும்.
சுவையான காரபோளி ரெடி. தேங்காய் சட்னி சோ்த்து சாப்பிட ருசியாய் இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.