பால் உருண்டைகள் செய்வது மிகவும் எளிது. சீக்கிரமாகவும் செய்து பரிமாறி விடலாம். வீட்டில் இருப்பதை வைத்து செய்து அசத்தலாம். கிரைண்டர் இல்லாத பொழுது இட்லிக்கு அரைக்கும் மாவில் தேவையான அளவு எடுத்து செய்வது வழக்கம்.
பால் உருண்டைகள்:
செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி -ஒரு டம்ளர்
உளுந்து - முக்கால் டம்ளர்
தேங்காய் பால்- இரண்டு டம்ளர்
பசும்பால் -ஒரு டம்ளர்
சர்க்கரை- முக்கால் டம்ளர்
எண்ணெய் பொரிக்க- தேவையான அளவு
செய்முறை:
காய்ச்சிய பசும்பாலுடன் தேங்காய்ப்பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும்படி நன்றாகக் கரைத்து ஏலப் பொடியையும் தூவி வைக்கவும்.
அரிசி உளுந்தை நன்றாக ஊறவைத்து, நைசாக அரைத்து, சின்ன சின்ன உருண்டைகளாக கிள்ளி கொதிக்கும் எண்ணெயில் போட்டு, வெள்ளை நிறம் மாறாமல் பொரித்து எடுக்கவும். அவற்றை கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பால்சர்க்கரை கலவையில் போடவும். சுவையான பால் உருண்டைகள் ரெடி. இவற்றை கெட்டியான வெறும் தேங்காய் பாலிலும் போடலாம். திக்கான பசும்பாலில் மட்டும் போடலாம். இரண்டையும் கலந்து போட்டாலும் ருசி அசத்தலாக இருக்கும். வெல்லத்துருவல் அல்லது சர்க்கரை சேர்க்க வேண்டியது அவசியம்.
உளுந்து ஜாமூன்:
செய்ய தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு- கால் கிலோ
சீனி- 400 கிராம்
எண்ணெய் பொரிக்க -தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை நன்றாக ஊறவைத்து நைசாக அரைக்கவும். சீனியை பாகு காய்ச்சி இறக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து உளுந்துமாவை சின்ன சின்ன ஜாமூன் உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து சீனி பாகில் ஊறவிடவும். உளுந்து ஜாமூன் ரெடி. எடுத்து பரிமாற ருசி அசத்தலாக இருக்கும்.