
இன்றைக்கு சுவையான மரவள்ளிக்கிழங்கு அல்வா மற்றும் தேங்காய் புட்டிங் ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
மரவள்ளிக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்.
மரவள்ளிக்கிழங்கு -1 கப்.
சர்க்கரை-1கப்.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
புட் கலர்-சிறிதளவு.
முந்திரி-10
நெய்-8 தேக்கரண்டி.
மரவள்ளிக்கிழங்கு அல்வா செய்முறை விளக்கம்.
முதலில் மிக்ஸியில் 1 கப் துருவிய மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இப்போது அதை ஒரு பவுலில் மாற்றிக்கொண்டு 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய்விட்டு முந்திரி 10 சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே கடாயில் அரைத்து வைத்திருந்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்துவிட்டு சிறிது புட் கலர் சேர்த்து கலந்து விடவும். இத்துடன் 1கப் சர்க்கரை, ஏலக்காய்தூள் 1 தேக்கரண்டி, நெய் 6 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அல்வாவை கிண்டவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் அந்த சமயம் வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து கலந்துவிட்டு இறக்கி விடவும். சூப்பர் சுவையில் மரவள்ளிக்கிழங்கு அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
தேங்காய் புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்.
தேங்காய் துருவல்-2 கப்.
கன்டென்ஸ்ட் மில்க்-200 கிராம்.
சோளமாவு-1 கப்.
தண்ணீர்-4 கப்.
தேங்காய் புட்டிங் செய்முறை விளக்கம்.
முதலில் 2 கப் துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை கடாயில் மாற்றிவிட்டு அதில் 200 கிராம் கன்டென்ஸ்ட் மில்க்கை சேர்த்து கலந்துவிடவும். இதில் 1 கப் சோளமாவை சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
இக்கலவை நன்றாக கட்டியாக தொடங்கும் அச்சமயம் இறக்கிவிட்டு ஒரு பவுலில் மாற்றிவிட்டு 30 நிமிடம் பிரீசரில் வைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் புட்டிங் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.