கிட்ஸ் ஸ்பெஷல்: நாவூறும் சுவையில் மணக்கும் வெள்ளை பிரியாணி!

white biriyani!
Tasty white biriyani!
Published on

பொதுவாக பிரியாணி காரமாக இருக்கும் என்பதால் குழந்தைகள் அதிகம் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த வெள்ளை பிரியாணி செய்து தந்து பாருங்கள். நிச்சயம் குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாமல் கேட்டு சாப்பிடுவார்கள். அப்படி என்ன இருக்கு இந்த வெள்ளை பிரியாணியில்? வாங்க பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி அல்லது பிரியாணி அரிசி- 1 கப்
தேங்காய் பால்  -  11/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பட்டை ,இலவங்கம் - தலா 3
சோம்பு - சிறிது
பிரியாணி இலை - 1
அன்னாசிப்பூ ,மராட்டிமொக்கு ,ஏலக்காய் தலா 2
உப்பு  - தேவையான அளவு
புதினா - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் - நான்கு ஸ்பூன்

செய்முறை:
பாஸ்மதி ரைஸ் அரிசியை நன்கு ஊற வைத்து வடித்து வைத்து விடுங்கள். இஞ்சி பூண்டு சிறிது பொதினா சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் பட்டை சோம்பு லவங்கம் ஏலக்காய் பிரியாணி மசால் சாமான்கள் போட்டு நன்கு வாசம் வந்ததும் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். உடன் இஞ்சி பூண்டு மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
பணியாரம் முதல் லட்டு வரை: கரும்புச் சாறு மேஜிக்!
white biriyani!

வதங்கியதும் அரைத்து வடித்து வைத்துள்ள கெட்டியான தேங்காய் பாலுடன் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் நீர் என்ற அளவில் அதில் ஊற்றி கொதித்ததும் பாஸ்மதி அரிசியைப்போட்டு போட்டு அரிசியை போட்டு  உப்பு சேர்த்து மூடி வைத்து விடுங்கள். குக்கரில் இரண்டு சவுண்ட் வந்ததும் நிறுத்தி எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கிளறு கிளறி மேலே புதினா கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள காளான் கிரேவி அல்லது  வெள்ளரிக்காய் சேர்த்த தயிர் பச்சடி சூப்பராக இருக்கும். தக்காளி சாஸ்ம் குழந்தைகள் விரும்புவார்கள்.

குறிப்பு - இதில் தேங்காய்ப்பால் அதிகம் சேர்ப்பதால் காரம் தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கலாம். முந்திரி போன்றவையும் உங்கள் சாய்ஸ்.

-சேலம் சுபா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com