

வெள்ளிக் கிழமை:
Breakfast: Besan cheela / mung dal cheela + tomato ketchup / coriander chutney:
முங் தால் சீலா:
காலை எழுந்த உடனேயே 250g பயத்தம் பருப்பை ஊறப் போடவும். இந்த அளவானது இரண்டு பேர் இருந்தால், காலை உணவு போக இரவுக்கும் வந்துவிடும்.
ஒரு மணி நேரம் கழித்து, பயத்தம் பருப்பை நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும். பிறகு, அதில் தோசை சுடும் பதத்திற்குத் தேவையான தண்ணீரை ஊற்றி, அதில் ½ ஸ்பூன் மஞ்சள் தூள், ½ ஸ்பூன் சீரகத் தூள், ½ ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பைச் சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றிச் சுடவும். இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும். மீடியமான பதத்தில் சுடவும். ரொம்ப மெல்லியதாக இந்த தோசையைச் சுட முடியாது. காலை உணவிற்குச் செய்த பிறகு, மீந்த மாவை ஃபிரிட்ஜில் வைக்கவும்.