

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் செல்கிறார்கள். முக்கால்வாசி தம்பதியினர் தனியாகத்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, காலை வேளையில் பரபரப்பாக டிபன், லஞ்ச் என்று தாமே செய்துகொண்டு செல்வது என்பது மிகக் கடினமாக இருக்கிறது. அதே நேரம், என்ன செய்வது என்று யோசித்து யோசித்து இன்னும் நேரம் ஆகிவிடுவதால் டென்ஷன் ஆகிவிடுகிறார்கள்.
இதோ, உங்களுக்கு ஏற்றவாறு நான் வாரத்தின் ஐந்து நாட்களுக்கும் அட்டவணை தயாரித்துள்ளேன். நீங்கள் இந்த அட்டவணையை பிரிண்ட் அவுட் எடுத்து உங்கள் கிச்சனில் ஒட்டிக்கொள்ளவும். முன்னேற்பாடாகவே மாத சாமான் வாங்கும்போது தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளவும். அதேபோல, இந்த அட்டவணையைப் பார்த்துக்கொண்டு தினசரி தேவைக்கான காய்கறிகளையும் வாங்கி வைத்துக்கொண்டீர்களேயானால், யோசிக்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது. இதனால் நீங்கள் டென்ஷன் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். Saturday மற்றும் Sunday, உங்கள் இஷ்டம் போல என்ன வேண்டுமோ செய்து சாப்பிடுங்கள். Non-veg பிரியர்களாக இருந்தால், அதை செய்து சாப்பிடுங்கள். சரி, வாங்க மெனுவைப் பார்க்கலாம்.