

வியாழக் கிழமை:
Breakfast: Any kanji with milk or butter milk:
வியாழக் கிழமை தோறும் ஏதாவது ஒரு கஞ்சி செய்து குடிக்கலாம். பாலில் கலந்தோ அல்லது மோரில் கலந்தோ குடிக்கலாம். ஓட்ஸ், ராகி, கொள்ளு மாவு, கம்பு மாவு இப்படி எதாவது ஒன்றை மூன்று டம்ளர் தண்ணீரில் நான்கைந்து ஸ்பூன் அளவிற்குப் போட்டு நன்றாகக் கலந்து பிறகு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். கட்டி தட்டாமல் பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். பிறகு, பால், சர்க்கரை கலந்தோ அல்லது மோர், உப்பு மற்றும் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு கலந்தோ குடிக்கலாம். பாலில் கலந்து குடிக்கும் பட்சத்தில், சூடாக இருக்கும்போதே பாலையும் சர்க்கரையையும் சேர்க்கலாம். மோர் விட்டுக் குடிக்கும் பட்சத்தில், கஞ்சி சிறிது ஆறிய பிறகு மோரைக் கலக்கவும்.