

செவ்வாய் கிழமை:
Breakfast: Dosa with chutney:
நேற்று இரவு அரைத்து வைத்த மாவில் தோசையைச் சுட்டு சட்னியோடு சாப்பிடவும்.
Lunch: Rice + Any type of Chenna or Rajma or Whole moong masala + pickle:
காலை எழுந்தவுடன் ஊற வைத்துள்ள சென்னாவை அல்லது பச்சை பயறை அல்லது ராஜ்மாவை உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கவும். பிறகு, அது அடுப்பில் வேகும் வரை அதற்கான மசாலாவை மிக்ஸியில் அரைத்து ரெடியாக வைத்துக் கொள்ளவும். இன்னொரு குக்கரில் சாதத்தை வடித்து வைத்துக் கொள்ளவும். சென்னா அல்லது பயறோ அல்லது ராஜ்மாவோ வெந்து ஆறிய பிறகு, வாணலியில் அரைத்த மசாலாவையும், இரண்டு ஸ்பூன் சென்னா மசாலா தூளையும் மற்றும் மசாலாவுக்குத் தேவையான சிறிதளவு உப்பையும் போட்டுக் வதக்கிய பிறகு, இதையும் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும். பாத்திரத்தில் கொஞ்சம் சென்னா மசாலாவை டின்னருக்காக ஃபிரிட்ஜில் எடுத்து வைக்கவும். அவ்வளவுதாங்க! சாதத்தையும் சென்னாவையும் பேக் செய்து கொள்ளுங்கள். தொட்டுக்கொள்வதற்கு ஊறுகாய் இருந்தால் போதும். வேண்டுமென்றால், வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவற்றை துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.