

புதன் கிழமை:
Breakfast: பரோட்டா + ஜாம் / ஊறுகாய் / டீ:
காலை எழுந்தவுடன் இரவு ஃபிரிட்ஜில் வைத்துள்ள மாவை வெளியே எடுத்து வைக்கவும். பரோட்டா செய்து ஜாம் அல்லது ஊறுகாயோடு சாப்பிடவும். இல்லையென்றால், சுடச்சுட டீ போட்டு, டீ உடன் சாப்பிடலாம், நன்றாக இருக்கும்.
Lunch: Rice + Dal + vegetable fry/ salad:
ஒரு குக்கரில் சாதத்தை வடித்துக்கொள்ளவும். இன்னொரு குக்கரில் டால் செய்யவும். சிம்பிள் மற்றும் ஈஸி மெத்தடில் டால் செய்யலாம். குக்கரில் துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம், இரண்டு மூன்று பச்சை மிளகாய், பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி இவை எல்லாவற்றையும் போட்டு, தேவையான தண்ணீரை ஊற்றி மூடி வைக்கவும். நான்கைந்து விசில் வந்ததும் அணைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் சீரகத்தைத் தாளித்து, வெந்த பருப்பை நன்றாகக் கடைந்து அதில் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அணைக்கவும்.