கரகர மொறுமொறுப்பான வெல்ல தட்டை!

தட்டை
தட்டை

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு ஒரு கப்

  • வெல்லம்  1/2 கப்

  • உப்பு ஒரு சிட்டிகை

  • கருப்பு எள் 2 டீஸ்பூன்

  • வெண்ணெய் சிறிதளவு

செய்முறை:

அரிசிமாவு வெறும் கடாயில் நன்றாக வறுத்து வைத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை பொடித்து கடாயில் கால் டம்ளர்  நீரில் வெல்லத்தை போட்டு கரைக்க வேண்டும். பாகு எல்லாம் தேவையில்லை...சாதாரணமாக கரைந்ததும் வறுத்த அரிசி மாவில் கொட்டி கருப்பு எள் சிறிய அளவு உப்பு மட்டுமே சேர்த்து வெண்ணெய் சேர்த்து தளர பிசைய வேண்டும்.



பின்னர் சுத்தமான வெள்ளை துணியில் ஒரு சிறிய அளவு உருண்டையை  வைத்து மெல்லியதாக தட்டி மிதமான சூட்டில் பொறித்தெடுக்க வேண்டும்.

இனிப்பான சுவையான வெல்லதட்டை தயார். இது வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இது நமது பாரம்பரிய கிராமத்து பலகாரங்களில் ஓன்று. பழைமைக்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டாயிற்றே. இந்த மழைக்காலத்தில் இதை செய்து நமது குடும்பத்தினரை அசத்தலாமே!!!

logo
Kalki Online
kalkionline.com