மிளகு பொங்கலுக்கு சிறந்த தொடு உணவு, தேங்காய் சட்னியா? இல்லை சாம்பாரா?

pongal...
pongal...Image credit - youtube.com
Published on

மிளகு பொங்கலுக்கு சிறந்த தொடு உணவு, தேங்காய் சட்னியா? இல்லை சாம்பாரா? இப்படி ஒரு கேள்வியோட ஒரு பட்டிமன்றம் நடத்தினா உங்க ஆதரவு எந்த பக்கம். இது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்விதான். ஆனா என்னை கேட்டால் ரெண்டுமே அசத்தலான தொடு உணவுதான் என்பேன்.

பெரும்பாலான மக்களுக்கு காலையில இந்த மிளகு பொங்கல் சாப்பிட கொடுத்தா சாப்பிடவே மாட்டாங்க. அதுக்கு முக்கியமான காரணம் இந்த பொங்கல் சாப்பிட்டதுமே பலருக்கு தூக்கம் வந்துவிடும். அதுக்கு காரணம் பொங்கலில் நெய் அதிகமாக சேர்க்கப்படுவது காரணமாகும்.

பொங்கல் சாப்பிட்டதும் செரிமானம் ஆக அதிக ஆக்சிஜன் தேவைப்படும். இதனால மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைந்து, டேக் டைவர்சன் எடுத்து வயிற்று பக்கம் செல்லும். இதனால் மூளையின் செயல்திறன் குறைவதால் தூக்கம் வருவது மாதிரி ஒரு உணர்வு நமக்கு ஏற்படும்.  பொங்கல் மட்டுமல்ல. கலோரிகள் அதிக அளவு உள்ள எந்த உணவு சாப்பிட்டாலும், நமக்கு இதே போலத்தான் தூக்கம் வரும்.

மார்கழி மாசம் நம்மூர் கோயில்களில் பிரசாதமாக இந்த மிளகு பொங்கல் வழங்குவார்கள் சின்ன வயதில் அந்த குளிரிலும் குளித்துவிட்டு  கோவிலுக்கு போய் சுடச்சுட தர்ற அந்த பொங்கலை தொண்ணை இலையில வாங்கி சாப்பிடும்போது, அந்த குளிருக்கு இதமா தொண்டைக்குள் இறங்கும். ஒரே ஒரு குறை என்னவென்றால் தொட்டுக் கொள்வதற்கு சட்னியோ, சாம்பாரோ இருக்காது.

ஒரு நல்ல மிளகு பொங்கலுக்கு உதாரணமே வறுத்து சேர்த்த முந்திரியும் அந்த நெய் மணமும்தான். அப்படியொரு பொங்கல் சாப்பிட வேண்டும் என்றால் கண்டிப்பாக நாம் பூர்வ ஜென்மத்தில்  புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும். 

இவ்வளவு பேசிவிட்டு ஒரு நல்ல பொங்கல் ரெசிபி சொல்லாமல் போனால் அந்தப் பொங்கல் நமக்கு சாபம் போட்டு விடும்.

தேவையான பொருட்கள்:

அரிசி : 1 கப் 

பாசிப்பருப்பு : 1/2 கப் 

முந்திரி : 10

மிளகு : 1 1/2 ஸ்பூன் 

சீரகம் : 1 ஸ்பூன் 

நெய் : 2 லிருந்து 4 ஸ்பூன் 

இஞ்சி : சிறு துண்டு 

கருவேப்பிலை : 1 கொத்து 

உப்பு : தேவையான அளவு 

இதையும் படியுங்கள்:
மைசூர் சில்க்கும் மோட்டிவேஷனும்..!
pongal...

செய்முறை:

ஒரு சட்டியில நெய் சேர்த்து அதில் மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி (3 கப் தண்ணீர் ) அரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, அது கூட தேவையான அளவு உப்பு சேர்த்து, 5 விசில் வர்ற வரைக்கும் வேகவைத்து அது ஆறியதும் பின்னர் தாளித்தது சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

எவ்வளவு எளிமையான செய்முறை. இதை அப்படியே செய்து ஒரு சட்னியோ, சாம்பாரோ வைத்து சாப்பிட்டு பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க மக்களே...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com