பொதுவாக ஒவ்வோரு உணவுக்குமே, அது உருவான கதை இருக்கும். அதேபோல்தான் இந்த பாவ் பாஜிக்கும் ஒரு கதை உள்ளது. ஆனால், இது சற்று வித்தியாசமானதுதான்.
நூடுல்ஸ் போன்ற பல ஃபாஸ் ஃபுட்கள் போரினால் உருவானவை என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல்தான் பாவ் பாஜியும்.
1860ம் ஆண்டு சமயத்தில் அமெரிக்காவில் சிவில் வார் நடந்தபோது, காட்டன் உற்பத்தி அங்கு மிகவும் குறைந்துப்போனது. இதனால், அமெரிக்க வாசிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதற்கு ஒரு மாற்று ஏற்பாடைச் செய்ய வேண்டும் என்று எண்ணியது அமெரிக்க காட்டன் மில்களின் ஒன்றிய நிர்வாகம். அந்த சமயங்களில் இந்தியாவில் காட்டன் உற்பத்தி அதிகமாகவே இருந்தது அல்லவா?
அப்போதுதான் அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடியது. குறிப்பாக மும்பையில் தயாரிக்கப்படும் முக்கால்வாசி காட்டன் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது. இதனால், காட்டனை உற்பத்தி செய்யும் வேலை அதிகமானது. ஆனால், அந்த வேலையை செய்யும் அளவுக்கு ஆட்கள் இல்லை. ஆகையால், காட்டன் மில்களில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டனர். அப்போது நிறைய பேர் சேர்ந்தனர். ஆனால், அவர்களுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டது. இதுதாண்டா நேரம் என்று தெரு ஓரத்தில் கடை வைத்திருந்தவர்கள் நிறைய உணவுகளை விற்க ஆரம்பித்தனர். அப்படியும் வேலையாட்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை.
இதனால், உணவுக்கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு ஒரு யோசனை பிறந்தது. மீதமிருந்த காய்கறிகளை மசாலாக்களுடன் நசுக்கி, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்தனர். பின் அதனுடன் பாஜி ( Bun) வைத்து பணியாளர்களின் பசியைப் போக்கினர். அந்த பன்னுக்கு ‘டவா’ என்றும், அந்த மசாலாவிற்கு ‘பாவ்’ என்றும் பெயர் வைத்தனர்.
இதன் சுவைப் பிடித்துப்போய் அனைவரும் இதனை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள். சிறிது காலத்திலேயே இது மும்பையின் புகழ்பெற்ற உணவாக மாறியது. நாளடைவில் இந்தியா முழுவதும் பிரபலமானது. இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக பாவ் பாஜி மாறியிருக்கிறது.
இப்படித்தான் பாவ் பாஜி கண்டுபிடிக்கப்பட்டது. பாவ் பாஜியின் சுவையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?