பீட்சா உருவான கதையை படித்துக்கொண்டே பீட்சாவை செய்து பார்க்கலாம் வாங்க!

பீட்சா...
பீட்சா...

பீட்சா' உலகில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாப்படும் உணவாகும். நம் வாழ்வில் மிகவும் தவிர்க்க முடியாத ஆடம்பர உணவாக கருதப்படும் பீட்சா, எங்கிருந்து வந்தது என்று தெரியுமா?

இன்று நாம் சுவைக்கும் பீட்சா இத்தாலியில் உள்ள நேப்பல்ஸ் நகரத்தில் உருவானதாகும். அமேரிக்கர்கள் பீட்சாவை அதிகம் விரும்புகிறார்கள். அதனால் தான் என்னமோ ஒரு நொடிக்கு 350 பீட்சா துண்டுகளை உண்கிறார்களாம். பீட்சாவின் மிகவும் பிரபலமான டாப்பிங் பெப்பரோனியாகும். அக்டோபர் மாதம் தேசிய பீட்சா தினமாக கொண்டாடப்படுகிறது. டாமினோஸ் பீட்சாவே இந்தியாவில் முதன் முதலில் நுழைந்த பீட்சா நிறுவனமாகும்.

இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட பீட்சாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பீட்சா செய்ய தேவையான பொருட்கள்:

மைதா-2 ½ கப்.

உப்பு-1 ½ தேக்கரண்டி.

ஜீனி-2 தேக்கரண்டி.

ஈஸ்ட்-1 1/2தேக்கரண்டி.

எண்ணை- தேவையான அளவு.

வெங்காயம்- சிறிதளவு.

மஸ்ரூம்-சிறிதளவு.

பச்சை குடைமிளகாய்-சிறிதளவு.

சிவப்பு குடைமிளகாய்-சிறிதளவு.

மஞ்சள் குடைமிளகாய்-சிறிதளவு

பச்சை மற்றும் கருப்பு ஆலிவ்- சிறிதளவு.

மோசிரெல்லா சீஸ்- தேவையான அளவு.

செடார் சீஸ்- தேவையான அளவு.

சில்லி பிளேக்ஸ்- சிறிதளவு.

பீட்சா
பீட்சா

பீட்சா செய்வதற்கான செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் 1கப் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு 2 தேக்கரண்டி ஜீனி,  1 1/2 தேக்கரண்டி ஈஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அப்படியே 5 நிமிடம் வைக்கவும். பின்னர் நுரையாக வந்திருந்தால், ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகிவிட்டது என்பதாகும்.

இப்போது ஒரு பெரிய பவுலில் 2 ½ கப் மைதா மாவு,  1 ½ தேக்கரண்டி உப்பு, 2 தேக்கரண்டி எண்ணை சேர்த்து விட்டு லேசாக பிசைந்து நாம் முன்பே செய்து வைத்திருக்கும் ஈஸ்ட் தண்ணீரை மாவில் ஊற்றி நன்றாக பிசையவும். இப்போது அந்த மாவை இன்னும் நன்றாக இழுத்து பிசையவும் அப்போதுதான் சாஃப்டாக இருக்கும். நன்றாக மாவை பிசைந்த பிறகு கையில் ஒட்டாமல் வரும். அப்போது மாவின் மீது எண்ணை தடவி பவுலில் ஈரத்துணி போட்டு மூடி வைத்துவிடவும். அந்த மாவை  2 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்தாமே இது! உங்களுக்குத் தெரியுமா?
பீட்சா...

இப்போது குக்கரின் அடியில் ஒரு லேயர் உப்பை சேர்த்துக்கொள்ளவும். பின்பு அதன் மீது ஸ்டான்டை வைக்கவும். இப்போது குக்கரை மூடி அடுப்பில் 15 நிமிடம் அதிக தீயில் வைத்து சூடு பண்ணவும். குக்கரில் வெயிட் போட தேவையில்லை.

இப்போது மாவை எடுத்து பார்த்தால் நன்றாக உப்பி வந்திருக்கும். அந்த மாவிலிருந்து சிறிது எடுத்து நன்றாக ஒரு தட்டில் பரப்பி வைக்கவும் ரொம்ப மெலிசாக இல்லாமல் இருக்க வேண்டும். அதன் மீது போர்க்கை வைத்து மாவை கொஞ்சம் குத்தி விடவும். அப்போது தான் மாவு பொங்கி வராது. ஒரு லேயர் பிட்சா சாஸ் சேர்த்துக்கொள்ளவும். இப்போது அதை நன்றாக பரப்பி விடவும். அதன் மீது மொசிரல்லோ சீஸை தூவவும். இப்போது செடார் சீஸை தூவவும். இது பீட்சாவிற்கு நல்ல நிறத்தை கொடுக்கும். அதன் மீது வெங்காயம், குடைமிளகாய், ஆலிவ், சிறிதாக வெட்டி வைத்த மஸ்ரூம் ஆகியவற்றை பரப்பி வைக்கவும். அதற்கு மேல் மறுபடியும் கொஞ்சம் சீஸை தூவி விடவும். அதன் மீது சில்லி பிளேக்ஸ் இருந்தால் சேர்த்து கொள்ளவும்.

இப்போது பீட்சாவை எடுத்து குக்கரில் வைத்து மூடி விடவும், 15 நிமிடம் நன்றாக வேகவிடவும். பிறகு எடுத்து துண்டுகளாக  வெட்டி பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com