வானிலை மாறுது... நூடுல்ஸ் கேட்குது...

ரெசிபிஸ்
வானிலை மாறுது... நூடுல்ஸ் கேட்குது...

ண்மையிலேயே அற்புதமான வானிலை நிலவுகிறது சென்னையில். நாம் இருப்பது சென்னையில ஊட்டியிலா தெரியவில்லை? சூடான நூடுல்ஸை ஒரு பவுலில் போட்டு ஸ்பூன் வைத்து இந்த அற்புதமான வானிலையை ரசித்து கொண்டே சாப்பிட்டு பாருங்கள் பூலோக சொர்க்கம். கூடவே மனதிற்கு பிடித்த இளையராஜா பாட்டும் இருந்தால் டபுள் தமாக்கா!

வித்தியாசமான சுவையில் ஒரு ஃபிரை நூடுல்ஸ் செய்யலாமா!?

நூடுல்ஸ் - இரண்டு பாக்கெட் (200 கிராம் )பீன்ஸ் 10 ,கோஸ் சிறிதளவு, கேரட் ஒன்று, பெரிய வெங்காயம் ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் கால் கப், சோயா சாஸ் கார்ன்பிளார் -தலா இரண்டு டீஸ்பூன் ,பச்சை மிளகாய் இரண்டு, பூண்டு நான்கு பல், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு.

ஆறு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி , நீரை நன்கு வடித்து விட்டு நூடுல்ஸை குளிர்ந்த நீரில் போட்டு அலசவும் . காய்கறிகளை சுத்தம் செய்து மெல்லியதாக நீள நீளமாக நறுக்கவும்.

சோயா சாஸ் கார்ன் மாவுடன் அரை கப் நீர் சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை மிளகாய் பூண்டை ஒன்றாக சேர்த்து நசுக்கி வைக்கவும் . அடி கனமான வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நசுக்கிய பூண்டு, மிளகாயை சேர்த்து வதக்கவும் . பின்னர் நறுக்கிய காய்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிதளவு உப்பு, சோயா சாஸ் கரைசல் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். தோசை கல்லை காயவைத்து நூடுல்ஸை அதில் நன்கு பரப்பவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி நன்கு திருப்பி விட்டு சற்று நிறம் மாறி மொறு மொறுப்பானதும் எடுத்து விடவும். ஒரு தட்டில் நூடுல்ஸைப் பரப்பி , அதன் மேல் காய்கறி கலவையை ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி சுட சுட பரிமாறவும். வித்தியாசமான சுவையில்  அசத்தும் இந்த ப்ரை நூடுல்ஸ். பீஸ் நூடுல்ஸ். (பச்சை பட்டாணி சீசன் வந்துவிட்டது).

தக்காளி நூடுல்ஸ்- இரண்டு பாக்கெட் (200 கிராம்) பச்சை பட்டாணி- ஒரு கப், பெரிய வெங்காயம் -2 இஞ்சி- சிறு துண்டு ,பூண்டு- இரண்டு பல், சீரகம்- ஒரு டீஸ்பூன்,தனி மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் -ஒரு டீஸ்பூன் எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சிறிதளவு.

நூடுல்ஸ் இரண்டு நிமிடம் கொதி நீரில் போட்டெடுத்து நீரை வடித்து எடுத்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்து நீரை வடித்துவிட்டு நன்கு மசிக்கவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லிசாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு ,சீரகம் , தனி மிளகாய் தூள், தனியா தூளைஒன்றாகச் சேர்த்து நைசாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி மசித்த பட்டாணி சேர்த்து கிளறவும். கடைசியாக சிறிதளவு உப்பு, நூடுல்ஸ் சேர்த்து கிளறி சுட சுட பரிமாறவும். சுவையில் அசத்தும் இந்த பீஸ் நூடுல்ஸ்.

அட... இந்த நூடுல்ஸ் எல்லாம் வேண்டாங்க எனக்கு ?!செஷ்வான் நூடுல்ஸ்தான் வேணும்னு சொல்றீங்களா ?!இதோ உங்களுக்காக (நீங்க கேட்டு நான் தராமலா)

நூடுல்ஸ்- இரண்டு பாக்கெட் ( 200 கிராம் ) கேரட் -ஒன்று, பீன்ஸ் -10, கோஸ்- சிறிதளவு, வெங்காயம்- ஒன்று வெங்காயத்தாள் -அரை கட்டு, காய்ந்த மிளகாய்- 10, பூண்டு- 6 எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு.

காய்ந்த மிளகாயுடன் பூண்டு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும் வெங்காயத்தாள் அனைத்தையும் விரல் நீளத்துண்டுகளாக மெல்லிசாக நறுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸை உடைத்து போடவும். ஒரு நிமிடம் வைத்திருந்து, நீரை வடித்து விட்டு, நூடுல்ஸை குளிர்ந்த நீரில் அலசி எடுத்து வைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கி நூடுல்ஸை அதன் மேல் பரப்பி ஒரு டீஸ்பூன் எண்ணெய் பரவலாக ஊற்றி இரண்டு முறை திருப்பிவிட்டு எடுத்து வைக்கவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள பூண்டு, மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய காய்கள் (வெங்காயத்தாளை தவிர ) சேர்த்து மிதமான தீயில் காய்கள் வேகும் வரை (சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.) வதக்கி , கடைசியில் நூடுல்ஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி கிளறி சுடச் சுட பரிமாறவும் (டொமேட்டோ சாஸூடன்) ஹோட்டல் சுவையில் அசத்தும் இந்த செஷ்வான் நூடுல்ஸ்.

என்னப்பா எங்க போறீங்க

கிச்சனுக்கா ? நூடுல்ஸ் செய்யவா?? ஆல் த பெஸ்ட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com