திரட்டு பால்
திரட்டு பால்

திரட்டு பால்!

Published on

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

நறுக்கிய முந்திரி - தேவையான அளவு

செய்முறை

அடிகனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி பாலை ஊற்றி வற்றக் காய்ச்சவும்.

பால் நன்கு காய்த்த பின்னர் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.

கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் பால் நன்கு வற்றி வெல்லத்துடன் சேர்ந்து திரண்டு வந்தபின் இறக்கி நறுக்கிய முந்திரி தூவி பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com