
துவரம் பருப்பு தோசை:
தேவை:
புழுங்கல் அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
வற மிளகாய் - ஆறு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
பெருங்காய பொடி - அரை ஸ்பூன்
செய்முறை:
புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் குடிநீரில் ஊற வைத்து, வற மிளகாய், உப்பு சேர்த்து அடை மாவு போல அரைக்கவும். சில மணி நேரங்கள் கழித்து, பெருங்காயப்பொடி கலந்து தோசை தவாவில் மாவை விட்டு தோசைகளாக வார்க்கவும். இது சுவையாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும்.
------------------------
எண்ணெய் இல்லா வடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகு, சீரகப்பொடி - 2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1 ஸ்பூன்
செய்முறை:
புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். அதனுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். மாவில் மிளகு, சீரகப்பொடி, பெருங்காய பொடி சேர்க்கவும். மாவை நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி, இட்லி தட்டில் வைத்து, நீராவியில் வேக வைத்து எடுக்கவும். இந்த வடை எண்ணெயில் பொரிக்காமல், ஆவியில் வேக வைப்பதால் உடம்புக்கும் நல்லது.