முதன் முதலாக மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தும்போது தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்!

மைக்ரோவேவ் ஓவன்
மைக்ரோவேவ் ஓவன்pixabay.com

வனுடன் வந்த செயல் விளக்க புத்தகத்தை படித்த பின்னே உபயோகிக்கவும். ஓவனில் ஏதாவது பிரச்னை என்றால் அதற்கென்று உள்ளவர்களைக் கொண்டே பழுது பார்ப்பதற்கு நியமிக்கவும். படித்து முடித்து அந்த புத்தகத்தை பத்திரப்படுத்தி வைக்கவும். அவ்வப்பொழுது சந்தேகம் நேரும் பொழுதெல்லாம் அதை எடுத்து படித்துப் பார்த்து விளங்கிக் கொள்வது நல்லது. இனி ஓவனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம். 

மைக்ரோ வேவில் உபயோகிக்க பயன்படுத்தும் பாத்திரம் பாதுகாப்பானதா என தெரிந்து கொள்ள அந்த பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு ஒரு நிமிடம் வரை ஓவனில் வைத்து எடுக்க வேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பாகவும், பாத்திரம் சூடாகாமலும் இருந்தால் அந்த பாத்திரம் உபயோகமானதாகும். .மைக்ரோ ஓவனில் சிறப்பான முறையில் சமையல் செய்ய அதற்காகவே வடிவமைக்கப்பட்ட பிரத்தியேகமான உஷ்ணத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய கண்ணாடி, செராமிக், பீங்கான் பாத்திரங்களையே உபயோகிக்கவும்.

ஒவனில் சமையல் செய்வதற்கு அகலமான பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும். 

லேசான பிளாஸ்டிக் காகித தட்டுக்கள், தங்க நிற விளிம்புகள் உள்ள பீங்கான் பாத்திரங்களை உபயோகிக்க வேண்டாம் 

மைக்ரோவேவ் முறையில் சமைக்கும் போது பாத்திரம் சூட்டை உறிஞ்சுவதில்லை .சமைக்கப்பட வேண்டிய உணவே உஷ்ணத்தை உறிஞ்சி கொண்டு வேக ஆரம்பிக்கிறது.

தளதளவென்று கொதி வராமலேயே சாதம் வெந்துவிடும் காரணம் தண்ணீர் சூட்டை உறிஞ்சி அரிசியை வேக வைப்பதற்கு பதில் உஷ்ணம் அரிசி யாலேயே நேரடியாக உறிஞ்சப்படுகிறது. 

உருளைக்கிழங்கு ,தக்காளி போன்றவைகளை முழுதாக சமைக்கும் முன் தோலை லேசாக கத்தியால் ஓரிரு இடங்களில் கீரி விடவும். இல்லாவிடில் தோலுக்குள் ஏறும் உஷ்ணத்தால் அவை வெடிக்கக் கூடும். 

மைக்ரோ வேவில் சமைக்கும்போது நடு நடுவில் நிறுத்தி உணவு வகைகளை கிளறி விட வேண்டும். அப்போதுதான் உணவு ஒன்று போல வேகும். 

அரை வேக்காடு போல தோன்றும் காய்கறிகள் அணைக்கப்பட்ட அடுப்பில் இருக்கும் போதே முழுமையாக வெந்துவிடும். இம்முறையில் சமைக்கும் போது சுவைகளும், மணங்களும் அதிகரிக்கப்படுகிறது. நிறம் மாறுவதில்லை. 

அடுப்பு அனல், சூடு ,ஆவி அடிக்கும் உணவை கைவிடாமல் கிளரும் சிரமம், அடி பிடிக்கும் அபாயம் எதுவும் இல்லை. 

சூடான உணவு பொருளை பருத்தி கையுறை அணிந்து கொண்டுதான் வெளியே எடுக்க வேண்டும். 

உணவு மிக வேகமாக சமைக்கப்படுவதால் சத்துக்கள் கெடுவதில்லை. 

உட்புறம் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் சிதறினால் கண்ணாடி தகவு உடைய வாய்ப்பு உண்டு. அதனால் தேவைக்கு மேல் நீர் உபயோகிக்க வேண்டாம். 

ஓரிரு நிமிடம் சமைக்கும் உணவை வெறும் கையால் எடுக்கலாம். 

ஒவ்வொரு பொருளுக்கும் மைக்ரோவேவில் அதன் வெப்பநிலையை உபயோகிக்க வேண்டும். மைக்ரோவேவை திறக்கும்போது முகத்தை கதவின் முன் கொண்டு போகக் கூடாது. ஆவி முகத்தில் அடிக்கும். 

ஃப்ரிட்ஜில் வைத்திருந்த குழம்பு சாம்பார் சூடு படுத்த4- 6 நிமிடங்கள் வரை உபயோகிக்க வேண்டும். 

பாலை சூடாக்க பதினைந்தில் இருந்து 45 துளிகள் உபயோகிக்க வேண்டும். 


மைக்ரோவேவ் ஓவன்
மைக்ரோவேவ் ஓவன் pixabay.com

சப்பாத்தி, ரொட்டி இவைகளை மறுபடியும் சூடாக்க வேண்டும் என்றால், அதனை ஒரு அலுமினிய பாயில் போட்டு மூடி சூடாக்கவும். 

பாப்கார்ன் செய்யும்போது பாத்திரத்தில் சோளமணி களோடு இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து மூடி போட்டு மூன்று நிமிடம் அதிக வெப்பத்தில் ஓவனில் வைத்து எடுக்கவும். 

திரவ வகைகளை தேவையில்லாமல் அதிகமான உஷ்ண நிலையில் வைக்க கூடாது. 

ஓவனை ஆப் செய்த பிறகும் உணவுப் பொருட்கள் வெந்து கொண்டிருக்கும். அதனால் பாத்திரத்தை சிறிது நேரம் கழித்து வெளியில் எடுக்கவும். 

இதையும் படியுங்கள்:
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் இனி மெசேஜ் அனுப்ப முடியாது! 
மைக்ரோவேவ் ஓவன்

உணவுப் பொருளை கரகரப்பாக தயாரிக்க திறந்து வைத்தாலே போதும். 

பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு ஓவனில் 30 நொடிகள் வைத்து எடுத்தால் எளிதாக உரிக்க முடியும். பூண்டு பற்களை 30 நொடிகள் வைத்து எடுத்தால் எளிதில் உரிக்க வரும். 

மைக்ரோவேவ் உட்புறத்தை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழியவும். இதனை ஓவனில் இரண்டு நிமிடம் வைக்கவும். பிசுக்கு தன்மையை நீராவி எடுத்து விடும். பின்னர் ஒரு சுத்தமான துணியால் துடைத்து விடவும். அதன் வெளிப்புறத்தை டிஷ்யூ பேப்பரால் துடைக்கலாம். 

கேஸ் அடுப்பின் அருகில் மைக்ரோவேவ் ஓவனை இணைக்க வேண்டாம். 

இது போன்ற சில முக்கியமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் முதன் முதலில் ஓவனை பயன்படுத்தும் பொழுது பயம் இல்லாமல் இருக்கும். பிறகு பழகப் பழக நன்றாக சமைக்க முடியும். தன்னுடைய அனுபவத்தின் மூலம் அதிகமான டிப்ஸ்களை மக்களுக்கு அளிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com