ஸ்ரீலங்காவின் இனிப்பான தோதலை (Dodal) செய்து பார்க்கலாம் வாங்க!

ஸ்ரீலங்காவின் இனிப்பான தோதல்...
ஸ்ரீலங்காவின் இனிப்பான தோதல்...topsrilankanrecipe.com

‘தோதல்’ இலங்கையின் புகழ் பெற்ற இனிப்பு வகையாகும். இதை சக்கரை களி என்றும் கூறுவார்கள். இது ஒரு இந்தோனேசிய இனிப்பு வகை என்றும் இலங்கைக்கு வணிகர் ஒருவரால் கொண்டு வரப்பட்டது என்று கூறப்படுகிறது. ராமநாதபுரத்திற்கும் இலங்கைக்கும் பலமான வணிகம் இருந்து வந்ததால் தோதல் கீழக்கரை ராமநாதபுரத்திற்கும் அதன் மூலமாகவே வந்தது என்று நம்பப்படுகிறது.

தோதல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பெரிய தேங்காய்-1

வெல்லம்-2கப்.

அரிசி மாவு-1 கப்.

முந்திரி- தேவையான அளவு.

ஏலக்காய் பவுடர்- ½ தேக்கரண்டி.

தோதல் செய்முறை விளக்கம்:

முதலில் தேங்காயை நன்றாக பூப்போல துருவிக் கொள்ளவும். இப்போது அதில் சிறிது தண்ணீர் ஊற்றி தேங்காய் பாலை எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு கப் அளவு நல்ல கட்டியான தேங்காய் பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது மறுபடியும் தண்ணீர் ஊற்றி தேங்காய் பாலை எடுக்கவும். இரண்டு கப் வரும் அளவு இருக்க வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் வெல்லம் 2கப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கரையும் வரை கலக்கவும். இப்போது  வெள்ளம் கரைந்து நன்றாக கொதிக்கும் நேரத்தில் அடுப்பை  நிறுத்தி விட்டு இறக்கி வடிக்கட்டி கொள்ளவும். அப்போதுதான் வெல்லத்தில் இருக்கும் தூசிகள் நீங்கும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி மாவு 1 கப்பை சேர்த்து அத்துடன் இரண்டாவதாக எடுத்த இரண்டு கப் தேங்காய் பாலை ஊற்றி அத்துடன் செய்து வைத்திருக்கும் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலக்கி அடுப்பில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் தீயை குறைத்து வைத்து கிண்டவும். நேரம் ஆக ஆக இந்த கலவை நன்றாக கட்டியாகிக் கொண்டே போகும். நன்றாக கட்டியானதும் முதல் தேங்காய் பால் 1கப்பை சேர்க்கவும். இத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்க்கவும். இப்போது கைவிடாமல் நன்றாக கலக்கவும். இப்படியே கலக்கும் போது நிறமும் பதமும் மாறிக் கொண்டே வரும். நன்றாக அல்வா பதத்திற்கு வர தொடங்கும். இப்போது அத்துடன் வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து கிண்டவும்.

இதையும் படியுங்கள்:
'மசாலா’ என்ற சொல் எப்படிப் பிறந்தது தெரியுமா?
ஸ்ரீலங்காவின் இனிப்பான தோதல்...

நன்றாக டார்க் நிறம் மற்றும் அல்வா பதம் வரும் வரை கிண்டும் போது தேங்காய் எண்ணை பிரிந்து வருவதை காணலாம். பிரிந்து வந்த தேங்காய் எண்ணையை தனியாக சேமித்து கொள்ளவும்.

இப்போது அல்வா பதத்திற்கு திரண்டு வந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். பிறகு ஆறியதும் தூண்டு துண்டாக வெட்டி பரிமாறலாம். இதை பிளேக் அல்வா என்றும் சொல்லுவார்கள். இப்போது சுவையான தோதல் அல்வா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com