மல்லிகைப் பூ இட்லி செய்ய இப்படி ட்ரை பண்ணுங்க!

மல்லிப்பூ இட்லி...
மல்லிப்பூ இட்லி...

ம்முடைய பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் இட்லி. ஆனால் ஒரு சிலர் வீட்டில் மெதுமெது இட்லியைப் பார்த்தால் இன்னும் இரண்டு சேர்த்து சாப்பிடலாம் என தோன்றும். இதே போல நம் வீட்டிலும் ஏன் செய்வதில்லை என்று இட்லியினால் பிரச்சனைகள் வந்த வீடுகளும் உண்டு. எப்படி செய்வது இந்த மல்லிகை பூ போன்ற மெதுமெது  இட்லிகள்? இதோ இதுபோல செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்கள் கைகளுக்கும் பரிசாக தங்க வளையல் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

 
தேவையானவை:
புழுங்கல் இட்லி அரிசி -4 டம்ளர் வெந்தயம்-  2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
அவல்- 2 ஸ்பூன்
உப்பு. - ஒரு கைப்பிடி


செய்முறை:
ரிசியை நன்கு கழுவி மூழ்கும் அளவு நீரூற்றி மூன்று மணிநேரம் ஊற விடுங்கள். உளுந்தையும் வெந்தயத் தையும்  சேர்த்துக் கழுவி சுமார் அரை மணி நேரம் ஊற வையுங்கள். அவலைக் கழுவி நீரை வடித்து வையுங்கள். இப்போது கிரைண்டர் முதலில் ஊறிய உளுந்து வெந்தயத்தைப் போட்டு நிறைய நீர் சேர்க்காமல் அவ்வப்போது நீர் தெளித்து புசுபுசவென நைசாக ஆகும் வரை ஆட்டி ஒரு பாத்திரத்தில் வழியுங்கள். பின் நன்கு ஊறிய அரிசியையும் போட்டு ஆட்டி எடுக்கும்போது ஊறிய அவலையும் போட்டு நைசாக அரைத்து ஒரு டம்ளர் உரல் கழுவிய நீர் மட்டும் சேர்த்து உளுந்து மாவுடன் தேவையான உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து மூடி வைக்கவும்.

சுமார் எட்டு மணி நேரம் ஆனதும் எடுத்து பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் எடுத்துப் பார்த்தால் மேலே உப்பி வந்திருக்கும். மீண்டும் கரண்டி விட்டு நன்கு கலக்கி இட்லிப்பாத்திரத்தில் துணி போட்ட இட்லித் தட்டுகளில் ஊற்றி ஏழு அல்லது பத்து நிமிடங்கள் கழித்து நீர் தெளித்து எடுத்தால் பூப்போன்ற இட்லிகள் தயார்.

குறிப்பு- ஒரு சிலர் கைகளுக்கு இட்லி மாவு விரைவில் புளித்து விடும். அரைக்கும்போது நீருக்குப் பதில் ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கலாம். அதிக நேரம் உளுந்தை அரைக்கக்கூடாது. அரிசியை மிகவும் நைசாக அரைக்கக்கூடாது. அவ்வப்போது பிரிட்ஜில் உள்ள மாவை தேவைக்கு மட்டும் எடுத்து பயன்படுத்தவும். மொத்த மாவையும் எடுத்து நீர் விட்டுக் கரைத்தால் இட்லி சரியாக வராது. தோசைக்கு ஓகே. உளுந்தின் அளவுக்கு முக்கால் அளவு போடும் வெந்தயமும் அவலும் உடலுக்கும் நல்லது. இட்லியின் மிருதுத்தன்மைக்கும் நல்லது. முக்கியமாக மாவு ஆட்டும்போது சரியான நேரத்தில் சரியான பதத்தில் எடுக்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com