இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் நியூட்ரி கிரேவியை!

 நியூட்ரி கிரேவி...
நியூட்ரி கிரேவி...www.youtube.com
Published on

பொதுவாகவே சாதம், பிரியாணி, சப்பாத்தி போன்றவை களுக்கு தொட்டுக் கொள்வதற்கு குருமா வைப்போம். தற்போது குருமா வகைகளை விட கிரேவி எனப்படும் எண்ணெய் மிதங்கும் கெட்டியான சால்னா வகைகளை நாம் விரும்புகிறோம். இது போன்ற சத்தான அதே சமயம் வித்தியாச ருசி மிகுந்த நியூட்ரி கிரேவியை செய்து கொடுங்கள் உண்மையில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

 
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் -  3
தேங்காய் - 1 ஒரு சிறிய கப் அல்லது தேவைக்கு
தக்காளி -  4
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
வெள்ளை எள்ளு - 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டே ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -  1 டீஸ்பூன்( தேவைக்கு)
மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் -தலா 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -  சிறிது கருவேப்பிலை -  சிறிது
உப்பு -தேவையான அளவு 

செய்முறை:
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலை வெள்ளை எள்ளை மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ளவும். (வெள்ளை எள் பொரிந்ததும் எடுக்கவும் பொட்டுக்கடலை சற்று சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்). மூன்றும் ஆறியதும் முதலில் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அதன் பின் நீரூற்றி நைசாக அரைக்கவும். வெங்காயத்தையும் தக்காளகயையும் விழுதாக அரைக்கவும்.

இன்னொரு அடி கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வதக்கி அதன்பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் வரைக்கும் வதக்கி அதில் தேவையான உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை மிதமாக வைத்து நன்கு வதக்க வேண்டும். வாசம் வந்ததும் தேவையான நீரை சேர்த்து அடுப்பை பெரியதாக்கி கொதிக்கவிட்டு அதனுடன் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வெள்ளை எள் அரைத்த கலவையை சேர்த்து கொதி விட வேண்டும் இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமாக்கி 5 நிமிடம் கொதிக்க வைத்து  எண்ணெய் மேலே சற்றே மிதக்கும் போது இறக்கி கொத்துமல்லித்தழை தூவி இறக்கினால் மணக்கும் கிரேவி ரெடி. 

இந்த கிரேவி அரைத்த வெங்காயம் வெள்ளை எள், நிலக்கடலை கலவை மணத்துடன் பிரியாணி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாதத்துக்கு மிக அருமையான சைட்டிஷ்.

குறிப்பு- இதில் பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் கிரேவி கெட்டியாக மாறும்  என்பதால் கவனமாக அடுப்பை சிம்மில் வைத்து அடி பிடிக்காமல்  கிளறி விடுவது முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com