ஸ்வீட்கார்ன் இப்படி செஞ்சு பாருங்க… செம்ம டேஸ்டியா இருக்கும்!

ஸ்வீட் கார்ன்...
ஸ்வீட் கார்ன்...
Published on

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்வீட் கார்ன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ஸ்வீட் கார்னில் உப்பு, காரம், புளிப்பு, வெண்ணை என்று அனைத்தையும் சேர்த்து கலந்து கொடுக்கையில், அறுசுவையும் அதிலேயே அடங்கிவிடும்.

அத்தகைய ஸ்வீட் கார்னில் ஆரோக்கியத்திற்கும் சிறிதும் பஞ்சமில்லை. ஸ்வீட் கார்ன் ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. ஸ்வீட் கார்ன் ரத்தத்தில் நல்ல கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. இத்தகைய பெருமைகளை உடைய ஸ்வீட் கார்னை வைத்து இன்று ரெசிப்பி செய்யலாம் வாங்க.

ஸ்வீட்கார்ன் செய்ய தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன்- 2 கப்.

அரிசிமாவு-1 தேக்கரண்டி.

சோளமாவு-6 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1தேக்கரண்டி.

சாட் மசாலா-1/2 தேக்கரண்டி.

எழுமிச்சை சாறு- சிறிதளவு.

மிளகு- தேவையான அளவு.

எண்ணை- தேவையான அளவு.

கொத்தமல்லி,வெங்காயம்- அலங்கரிப்பதற்கு.

ஸ்வீட் கார்ன் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் வைத்திருக்கும் ஸ்வீட் கார்ன் 2 கப்பை சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும். இப்போது வெந்த ஸ்வீட் கார்னை வடிக்கட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது கார்னில் அரிசி மாவு 1 தேக்கரண்டி, சோளமாவு  6 தேக்கரண்டி சேர்த்து  அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகு சேர்த்து கொள்ளவும். இப்போது எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். மாவு ஸ்வீட் கார்னில் நன்றாக ஒட்டியிருக்க வேண்டியது அவசியம்.

முதலில் எண்ணெயை காய வைத்து விடவும். அப்போது தான் ஸ்வீட் கார்ன் கிரிஸ்பியாக வரும். கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வீட்கார்னை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது பொரித்து எடுத்த ஸ்வீட் கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் ½ தேக்கரண்டி சீரக தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி சாட் மசாலா, தேவையான அளவு உப்பு,  கொஞ்சம் மிளகு, கொஞ்சம் எழுமிச்சை பழசாறு சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளவும்.

அவ்வளவுதான்  ‘மொறு மொறு’ ஸ்வீட் கார்ன் தயார். இப்போ அதை ஒரு பிளேட்டில் மாற்றி விட்டு அதன் மேலே அலங்கரிக்க, கொஞ்சம் வெங்காயம், மல்லி இலை தூவி அதன் மீது சின்ன எழுமிச்சை பழ துண்டு வைத்து பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com