ரவையை கொண்டு தயாரித்த இரண்டு வகையான ஸ்வீட்ஸ்!

ரவை அல்வா
ரவை அல்வா  Image credit - thandoraa.com
Published on

ரவை அல்வா

தேவை: 

ரவை _1கப்     சர்க்கரை    _1 கப்  ஏலக்காய் தூள்  _1 ஸ்பூன் நெய் _1/2 கப்       முந்திரி _15

செய்முறை:

முதலில் ரவையை 2 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஊற வைக்கும்போது கைவைத்து ரவையை நன்கு பிசைந்து விடவும். 2 மணி நேரம் ஊறிய பிறகு ரவையை சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் 3 நிமிடம் பிசைந்து கொள்ளவும். மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும்

ஒரு பாத்திரத்தை எடுத்து அதன் மேல் நைசான வெள்ளை காட்டன் துணியை போட்டு அதன் மீது இந்த ரவை பாலை முழுமையாக தட்டி  பிசைந்து கொடுத்து  பின்னர் துணியை சேர்த்து கட்டி பாலை நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும். அடியில் மாவு போல் தங்கி இருக்கும்.

பின்னர் ஒரு வாணலியை எடுத்து அதில் நெய் தடவி கொள்ளவும். இந்த ரவை பாலை ஒரு கப்பில் அளந்து ஊற்றவும். 3 கப் பாலில் 1 கப் சர்க்கரையை சேர்த்து  நன்கு கலந்துவிடவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

பின்னர் இதை அடுப்பில் சிறு தீயில் வைத்து கெட்டியான பதத்தில் வரும் வரை கிண்டி இறக்கவும். இதற்கு நல்ல கலர் கிடைக்க ஒரு  கேரமல் சேர்க்கலாம்.

இந்த கேரமல் செய்ய தனியாக ஒரு சிறிய தவாயில் 2 ஸ்பூன் சர்க்கரை, 1 ஸ்பூன்  தண்ணீர் சேர்த்து தீயை அதிகமாக வைத்து சர்க்கரையை கரண்டியால் கை விடாமல் கலக்கும்போது  கலர் மாறி தேன் கலரில் வரும் போது இதை ரவையுடன் சேர்த்து மீண்டும் கை விடாமல் கலக்கவும். அல்வா நல்ல கலரில் கிடைக்கும். இப்போது 1/4கப் நெய் சேர்த்து கிண்டவும். மீதி நெய்யை சேர்த்து சட்டியில் ஒட்டாமல் வரும் வரை கை விடாமல் கிண்டவும் பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து மறு படியும் அல்வாவை கிண்டி இறக்கவும். சூப்பர் சுவையுடன் ரவை அல்வா ரெடி.

ராஸ்பெரா ஸ்வீட்

தேவை:

ரவை _1கப், நெய் _1/4 கப், காய்ச்சி ஆறவைத்த பால் _3/4 கப், சர்க்கரை _300 கிராம்,   ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன், பால் பவுடர்_2 ஸ்பூன், பேக்கிங் சோடா _1/2 ஸ்பூன்,

செய்முறை:

முதலில் வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு 1 கப் ரவை சேர்த்து சிறு தீயில் வைத்து வறுக்கவும். வறுபட்டதும் பாலை சேர்த்து நன்றாக கலக்கவும். ரவை பாலை உறிஞ்சி நன்கு கெட்டியாக வந்தவுடன்  இறக்கி வேறு பாத்திரத்தில் வைத்து ஆறவைக்கவும்.

சர்க்கரை பாகு செய்ய 11/2 கப் சர்க்கரையில் 11/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் அத்துடன் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கி தனியாக வைக்கவும்.

பின்னர் கெட்டியாக இருந்த ரவை நன்கு ஆறிய பின் கை கொண்டு நன்றாக பிசைந்து இதில் பால் பவுடர் சேர்த்து நன்றாக 3 நிமிட நேரம் பிசைந்து மாவு மிருதுவாக இருக்க வேண்டும். இதிலிருந்து சிறிய மாவு உருண்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டி லேசாக சப்பி விடவும். இதே போல் எல்லா மாவையும் உருண்டைகளாக செய்து சப்பி எடுக்கவும்.

பின்னர் எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதித்ததும் சிறு தீயில் வைத்து எல்லா உருண்டை களையும் போட்டு பொரித்து மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிட வேண்டும்.  அனைத்தையும் பொரித்து சர்க்கரை பாகில் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும்.

தேவை என்றால்  முந்திரி பருப்பு எல்லா ஸ்வீட்டிலும் மேலே வைத்து அழகுபடுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com